1. செய்திகள்

இந்தியாவில் வெகுவாக குறைந்து வரும் ஆராய்ச்சியாளர்கள்: புதிய கல்வி கொள்கையில் அதிகரிப்பதற்கான பரிந்துரை

KJ Staff
KJ Staff

புதிய கல்வி கொள்கை பல்வேறு பரிந்துரைகளை திட்ட வரைவில் தெரிவித்துள்ளது. 484 பக்கங்களை கொண்ட அந்த வரைவில் பாட திட்டத்தில் தேவையான மாற்றம்  ஆகியன விரிவாக பரிந்துரைக்க பட்டுள்ளது. அதில் ஒரு கருத்தாக குறைந்து வரும் இந்தியா ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை ஆகும்.

இந்தியாவில் அறிவியல், மருத்துவம், உளவியல் போன்ற துறைகளில் போதிய அளவு வல்லுநர்கள் இல்லை என்பது வருந்த தக்க செய்தியாகும். உலக அறிவு சார்த்த அமைப்பு (World Intellectual Property Organisation ) வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் 1 லட்சம் பேர்களில் வெறும் 15 நபர்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு ஆகும்.

ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கையில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. 1 லட்சம் பேர்களில் 825 பேர் உள்ளனர், அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.  இங்கு 1 லட்சம் பேர்களில் 423 பேர் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். அனைத்து துறையிலும் நம்முடன் போட்டியிடும் சீனாவில் கூட 111 என்ற அளவில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதற்கு பல நாடுகள் விண்ணப்பிக்கின்றன.  காப்புரிமை பெறுவதில் சீனா முதலிடத்தில் உள்ளது, இது வரை 13 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கொடுக்க பட்டுள்ளன. இந்தியாவில் வெறும் 47 ஆயிரத்து 57 விண்ணப்பங்கள் கொடுக்க பட்டுள்ளன, அதிலும் 70% விண்ணப்பங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் அவசியமாகும். இது போன்ற விகித சாரம் நாட்டிற்கு பேராபத்து ஆகும் என உலக மையம் கூறியுள்ளது. இந்தியா  போன்ற வரும் நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் குறைவாக இருப்பது வருந்ததக்கதாக  உள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கையில் இதனை திருத்தும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மையங்கள், புதிய கன்டுபிடிப்புகள் ஆகியவற்றை அமைப்பதற்கான பரிந்துரை செய்ய பட்டுள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: World Intellectual Property Organisation Reveals Scientist Ratio: New Education Policy Suggests More Scientist Published on: 11 June 2019, 03:20 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.