1. செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிய அறிவுப்பு: வரும் கல்வியாண்டு முதல் யோகாவினை கட்டாய பாடமாக்க திட்டம்

KJ Staff
KJ Staff

அனைத்து கல்வி நிறுவனங்களும்  வரும் ஜூன் 21ஆம் தேதி கண்டிப்பாக யோகா நிகழ்ச்சியை நடத்த வேண்டும்  மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகம் சுற்றறிக்கையினை அனுப்பி உள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் யோகா பற்றிய விழிப்புணர்வு கட்டாயமாக்க பட வேண்டும். நோயற்ற ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா வழிகாட்டும் என்ற  எண்ணம் இளைஞர்களுக்கு வர வேண்டும். எனவே மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகம் அனைத்து கல்வி நிறுவனங்களிலும்  வரும் கல்வியாண்டு முதல் யோகாவினை கட்டாய பாடமாக்க  மனிதவள அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கும் என  மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.

இதற்கான திட்ட வரைவு ஒன்று மனிதவள அமைச்சகத்திற்கு அனுப்ப பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன்   மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யோகா பயற்சி செய்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்த தேவையான ஒத்துழைப்பினை தருவோம் என்றார்.

யோகா தின நிகழ்வுக்கு உதவியாக இருக்கும் வகையில், எளிய யோகா பயற்சிகளை செய்துகாட்டி விளக்கும்  வீடியோ ஒன்றினை https://yoga.ayush.gov.in/yoga/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. யோகா தினத்தன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தாங்கள் நடத்திய யோகா தின நிகழ்வுகளை https://ugc.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றும் படி கேட்டுக் கொண்டுள்ளது. 

ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை ‘ஆயுஷ்’ அமைச்சகம்  ஏற்பாடு செய்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஆயுதமாக்கி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில்  பிரதமர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு யோகா குருக்களையும், விருந்தினர்களையும்  நிகழ்ச்சியில் பங்கேற்கம் படி  அழைப்பு விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் யோகா தினத்தைக் கொண்டாடும் நாடுகளின் எண்ணிக்கை 177லிருந்து 200 ஆக உயர்ந்துள்ளது என்றார். 

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Yoga Would Be Mandatory In Educational Institutions: Ministry Of Ayush Made Draft: Waiting For Human Ministry Approval Published on: 11 June 2019, 11:45 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.