தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு சில நாட்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோல, பொறியியல் படிப்பில் பி.இ, பி.டெக் ஆகியப் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். http://tneaonline.org & http://tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
செப்டம்பர் நான்காம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 25ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும். செப்டம்பர் 7 முதல் அக்டோபர் நான்காம் தேதிவரை கலந்தாய்வு செய்யப்படும். அக்டோபர் மாதம் 20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூலை 31 ந் தேதிக்கு பின் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ச்கை தொடங்கும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி கூறியிருந்தார்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு, வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்றின் 2-வது அலை குறைந்திருப்பதைக் கருத்திரத்தில்கொண்டு, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்துகொண்டு இருக்கிறது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து 143 கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:
நீங்கள் தண்ணீரை அதிகளவில் பருகுவீர்களா? எச்சரிக்கை
வெங்காயப் பட்டறை அமைக்க ரூ.87,500 மானியம்-விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments