1. வாழ்வும் நலமும்

நீங்கள் தண்ணீரை அதிகளவில் பருகுவீர்களா? எச்சரிக்கை

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Do you drink a lot of water? Warning

Credit : Allure

குடிதண்ணீரைக் குறைந்த அளவு குடிப்பது உடலுக்கு எவ்வளவு உபாதைகளைக் கொண்டு வருகிறதோ, அதேபோல, அதிகளவு தண்ணீர் பருகுவதும் மிகவும் ஆபத்தானது. பல நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும். நம்ப முடிகிறதா உங்களால்? நம்பித்தான் ஆக வேண்டும்.

நீரின்றி (Without water)

நீரின்றி அமையாது உலகு என்றால் வள்ளுவர். அதைப்போல மனித உடலும் நீரின்றி இயங்காது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

நீரே அமிர்தம்

  • நீர்தான் மனித வாழ்வின் கண்கண்ட அமிர்தம். ஏனெனில் நாக்கு வறட்சியாக இருக்கும்போது, நீரின் சுவை அமுதத்தையே மிஞ்சும்.

  • தற்போது பலருக்கும் சரியான அளவில் நீர் பருகும் பழக்கமே இருப்பது இல்லை. இந்தப் பழக்கம் மிக ஆபத்தானது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

அதிக ரிஸ்க் (High risk)

  • உடலுக்குத் தேவையான அளவு நீரைப் பருகாமல் இருப்பதைப் போலவே அளவுக்கு அதிகமாகப் பருகுவதும் ரிஸ்க்தான்.

  • நம் உடல் ஆரோக்கியமாக இயங்க நீர் மிகவும் அவசியம். ஏனெனில் நம் உடல் கட்டுமானத்தின் பெரும்பகுதி நீர்ச்சத்தால் ஆனது.

  • ஸ்ட்ரெஸ் அதிகமாக இருப்பவர்களுக்குகூட நீரைத்தான் அதிகம் பருகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது நல்லதுதான். ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக்கூடாது.

சதாகாலமும் (Forever)

தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக, சிலர் எப்போதும் தண்ணீர் பருகிக்கொண்டே இருப்பார்கள். தாகம் எடுக்காவிட்டாலும், மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்பதற்காக சதாகாலமும் தண்ணீர் பருகுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அதிலும் வேலைக்குச் செல்பவர்கள் இத்தகை அலம்பலை அதிகம் செய்வார்கள்.

மருத்துவம் (Medicine)

எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பதில் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறது. இதற்குக் காரணம் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள் என்பதுதான்.

12 டம்ளர் (12 Tumler)

பொதுவாக, தினசரி ஒன்பது முதல் பன்னிரண்டு டம்ளர் நீர் பருகுவது நல்லது. அதாவது இரண்டரை முதல் மூன்று லிட்டர் நீர் பருக வேண்டும்.

வயிற்றை நிரப்ப அல்ல (Not to fill the stomach)

நீர் பருகுவதற்கு முக்கியமான விதி தாகம் எடுத்தால் நீர் பருக வேண்டும் என்பதுதானே தவிரவும் வயிற்றை நிரப்ப நீர் பருக வேண்டும் என்பது அல்ல.

எனவே, தாகமின்றி நீரைப் பருகுவதைத் தவிர்த்துக் கொள்வதே நமக்கு நன்மைப் பயக்கும்.

சிறுநீரின் நிறம் (The colour of the urine)

  • தீவிரமான நோய்கள் இருந்து மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே அதிகமான நீரைப் பருக வேண்டும். நம் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா, குறைவாக இருக்கிறதா என்பதை வெளியேறும் சிறுநீரின் நிறத்தைக்கொண்டே கணக்கிடலாம்.

  • பொதுவாக, சிறுநீரின் நிறம் என்பது சற்று வெளிறிய மஞ்சள் வண்ணம்தான். வெள்ளை வெளேர் என சிறுநீர் வெளியேறினால் உங்கள் உடலில் நீர்ச்சத்து கொஞ்சம் அதிகரித்துவிட்டது என்று பொருள்.

  • அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்று பொருள். எனவே, உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற அளவுக்கான நீரைப் பருக வேண்டும் என்பதில் கவனமாக இருக்கத் தவறவேண்டாம்.

  • நீர்ச்சத்துக் குறைவதைப் போலவே அதிகமாக இருப்பதும் நம் காலத்தின் பிரச்னைகளில் ஒன்று. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு இந்தப் பிரச்னை கணிசமாக இருக்கிறது. அதே போல் வொர்க் அவுட் செய்பவர்களும் அளவுக்கு அதிமாக நீரைப் பருகிவிடுகிறார்கள்.

சத்துக்கள் வெளியேறிவிடும் (Nutrients are excreted)

இப்படி அளவுக்கு அதிகமாக நீரைப் பருகினால் ரத்தத்தில் சேர வேண்டிய சத்துக்களை அது அடித்துக்கொண்டு போய்விடும்.

சிறுநீரக பாதிப்பு (Kidney damage)

இதன் காரணமாக சிறுநீரகமும் பாதிக்கும். நம் உடல் செல்லில் சோடியம் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கும். அளவுக்கு அதிகமான நீர்வரத்து இந்த சோடியத்தைக் கரைத்துவிட்டால் ஹைப்போநட்ரீமியா போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, உங்கள் உடலின் தேவையை அறிந்து அளவாக நீர் பருகுங்கள்.

மேலும் படிக்க...

உடலை நீர்ச்சத்துடன் பாதுகாக்க பின்பற்றவேண்டிய குறிப்பு !!

தித்திக்கும் தேன் கலந்த வெந்நீரின் திகட்டாத பலன்கள்!

English Summary: Do you drink a lot of water? Warning

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.