இனி ரேஷன் கடையிலேயே சிலிண்டர் வாங்கலாம்: அரசின் புதிய அறிவிப்பு!
தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் IOC யின் 5 கிலோ மற்றும் 2கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். அதோடு, தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
தீவனப்பயிர் உற்பத்தியாளருக்கு 25% மானியம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளைக் கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராகத் தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தீவனப் பயிர் அறுவடை இயந்திரம் மற்றும் தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம்,டிராக்டர் ஆகியவற்றை 25% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள்,பால் பண்ணை உரிமையாளர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இனி ரேஷன் கடையிலேயே சிலிண்டர் வாங்கலாம்: அரசின் புதிய அறிவிப்பு!
தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் IOC யின் 5 கிலோ மற்றும் 2கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். அதோடு, தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நேற்றுத் தென் மண்டல கவுண்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மாலையில் கேரள அரசு சார்பில் நடக்கும் கலை, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழகம் கேரளா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும் வகையிலான திட்டங்கள் அடங்கிய அறிக்கையை வழங்கினார். மேலும், பல்வேறு திட்டங்கள் குறித்தும், முல்லைபெரியாறு பிரச்சனைக் குறித்தும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சந்திப்பு
கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அதிகாரிகளைச் சந்தித்தார், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இக்கூட்டத்தில் வேளாண்மைக் குறித்த திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. அமைச்சருடன் கடலூர் வேளாண்மைத் துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments