1. மற்றவை

படிக்கும் போதே ரூ.2 கோடி சம்பளத்தில் வேலை- விவசாயி மகன் சாதனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
2 crore salary while studying - Farmer's son record!
Credit: Samayam Tamil

உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி மகன், படிக்கும் போதே ரூ.2 கோடி சம்பளத்தில் வேலை வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சிறந்த உதாரணம் (The best example)

உற்சாகத்துடன் உழைக்க முன்வந்தால், வயது ஒரு தடை இல்லை. அதே நேரத்தில் கடுமையாக உழைத்தால் எதுவும் சாத்தியமும், எல்லாமும் கிடைக்கும் என்பதற்கு இந்த விவசாயியின் மகனே சிறந்த உதாரணம்.
இவர் ஊரிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பொதுவாகப் படிக்கும் ஒவ்வொருவரும் நல்ல சம்பளத்தில் வேலையில் சேர வேண்டும் என்பதையே தங்கள் இலக்காக வைத்திருப்பார்கள். உண்மையில் நல்ல சம்பளத்தில் வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

அதிக சம்பளம் (Higher salary)

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேலை கிடைக்கும். ஆனால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தால் அந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. ஊரே பார்த்து ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் வேலையும், சம்பளமும் அமைந்தால் எப்படி இருக்கும். அப்படியொரு வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது.

விவசாயி மகன் (Son of a farmer

22 வயதான ரோஹித், உத்திரகாண்ட் மாநிலத்தின் கோத்வார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை விவசாயி, தாய் இல்லத்தரசி. இவருக்கு ஒரு சகோதரி நர்ஸாக பணியாற்றி வருகிறார். மாத வருமானமே வெறும் ரூ10 ஆயிரத்தில் 4 பேரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

ஏழ்மைக் குடும்பம் (Poor family)

வறுமையான சூழ்நிலையில் படித்த ரோஹித் பள்ளி படிப்பை முடித்ததும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். ஆனால் அங்கு நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை. பின்னர் அவர் GATE தேர்வு எழுதினார். அந்த தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி கவ்ஹாத்தியில் படிக்க தேர்வானார். அங்கிருந்து அவர் கேப்ஸ் இன்டர்வியூவில் கலந்து கொண்டார்.

அங்கு உபேர் நிறுவனம் இவருக்கு ஆண்டிற்கு ரூ 2.05 கோடி என்ற சம்பளத்துடன் படித்து முடித்ததும் வேலையில் சேரும் ஆணையை வழங்கியது.

ஊரே கொண்டாடும் நபர் 

இதனால் இவரது குடும்பம் மட்டுமல்ல ஊரே சந்தோஷமாக இருக்கிறது. அந்த சுற்ற வட்டார பகுதியிலேயே அதிகம் சம்பாதிக்கு நபராக ரோஹித் மாறப்போகிறார்.

இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதற்காகக் கடுமையான உழைப்பு இருந்தால் வெற்றி தானாகக் கிடைக்கும் என்பதற்கு ரோஹித்தே சிறந்த உதாரணம்.

மேலும் படிக்க...

பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!

நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!

English Summary: 2 crore salary while studying - Farmer's son record! Published on: 13 December 2021, 11:26 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.