1. மற்றவை

500 ரூபாய் இருந்தால் போதும்: பென்சன் பற்றிய கவலையே வேண்டாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension scheme

இப்பொழுது 30 மற்றும் 40 வயதில் உள்ளவர்கள் அதிக ஆர்வம் காட்டுவது பென்சன் சார்ந்த திட்டங்களாகத்தான் உள்ளது. ஏனெனில் இன்று நீங்கள் சேமிக்கும் பணம்தான் வருங்காலத்தில் உங்களின் வயதான காலத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். அதிலும் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள பென்சன் திட்டங்களில் முதலீடு செய்தால் அவை உங்களின் முதலீட்டின் மீது இருமடங்கு லாபத்தை அளிக்கும் என்றால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும். அதிலும் பாதுகாப்பான பென்சன் சேமிப்புத் திட்டங்கள் பற்றி இக்கட்டுரையில் ஒரு சிறு விளக்கம் காணலாம்.

எஸ்பிஐ ரிட்டையர்மெண்ட் பெனிஃபிட் ஃபண்ட் (SBI Retirement Benefits Fund - Aggressive Plan - Direct Plan-Growth)

இந்த ஃபண்டானது எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் சென்று ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஓராண்டு ஆன நிலையில் இந்த ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பானது ரூ.778.69 கோடியாக உள்ளது. இதிலிருந்து இந்த ஃபண்டிற்கான வரவேற்பையும் அதன் வளர்ச்சியையும் நீங்கள் காணலாம். இந்த ஃபண்டி சற்று அதிக சந்தை அபாயங்களுடைய திட்டமாகும் ஆனால் நீண்டகால அடிப்படையில் நீங்கள் இதில் முதலீடு செய்தால் நல்ல பென்சன் தொகையைப் பெறலாம்.

இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச சிப் முதலீடு ரூ.500 ஆகும். அதே லம்ப்சம் தொகையெனில் ஆண்டுக்கு ரூ.5000 ஆகும். இந்த ஃபண்டிற்கான லாக்-இன் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இந்த ஃபண்டானது ஆண்டொன்றுக்குச் சராசரியாக 22.44% ஆண்டு வருமானத்தை அளித்து வருகிறது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் இந்த ஃபண்டில் எந்தவொரு வெளியேற்றக் கட்டணமும் இல்லை.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

500 ரூபாய் இருந்தால் போதும்: வீட்டிலிருந்தே ஈஸியா 1 லட்சம் சம்பாதிக்கலாம்!

அரசு பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

English Summary: 500 rupees is enough: don't worry about pension! Published on: 23 September 2022, 08:50 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub