அரசு ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படி உயர்வு எப்பொழுது அடையும் என பல நாட்களாக எண்ணிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு இருந்த ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்தது. அத்தகைய அகவிலைப்படி 4% அதிகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) ஆகியந அதிகரித்தன. இத்தகைய அறிவிப்பினை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியீடு செய்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக அரசு அறிவித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து இருக்கிறார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு முறை அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (DA) ஒவ்வொரு ஆண்டும் திருத்தம் செய்யப்படும். டிஏ மற்றும் ஊதிய உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்பதால், மார்ச் 31ம் தேதிக்குள் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் அகவிலைப்படியினை(DA) மத்திய அரசு திருத்துவது வழக்கமான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் இந்த உயர்வு கணக்கிடப்படுகிறது. அரசு தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் CPI-IW தரவு குறித்த விள்ளக்கங்களை வெளியிடுகிறது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியினைக் கணக்கிடுவதற்கான பரிந்துரைக்கப்பட்ட ஃபார்முலா இதுவே ஆகும்.
மத்திய அரசு ஊழியர்கள் இந்த முறை அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அது உறுதியாகி இருக்கிறது. ஓய்வூதியதாரர்கலுக்கான அகவிலைப்படியும் 4% உயர்ந்து உள்ளது.
அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு ஊழியரின் சம்பள மேட்ரிக்ஸில் உள்ள அளவினைப் பொறுத்து அகவிலைப்படி மாற்றம் அடையும்.
மேலும் படிக்க
பழங்குடியின விவசாயிகளுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிப்பு!
புதிய இ-சேவை மையங்கள் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்க!
Share your comments