மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊதியத்துடன் வழங்கப்படுகின்ற அகவிலைப்படி, வீட்டு வாடகை, பயணப்படி, பதவி உயர்வு ஆகியவற்றுக்கு அடுத்ததாக இப்போது ஊழியர்களுக்கு மீண்டுமொரு ஒரு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கின்றது.
2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கப்போகிறது. மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கலாம். ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.8000 வரை உயரும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தங்களது ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்கு உயர்த்த வேண்டும் என நீண்ட காலமாகக் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். மத்திய ஊழியர்களின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கக்கூடும் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன் விளைவாக நல்ல செய்தியானது வரும் மாதமான ஜூலை மாதத்திற்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறே நடந்தால் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைக்கும்.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
எவ்வளவு சம்பளம் உயரும்?
மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து முடிவு எடுக்கப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் நேரடியாக உயரும் எனத் தகவல் கூறுகின்றது. aரசு பணியாளர்கள் தற்பொழுது 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் உதியம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது, அதை அரசு 3.68 ஆக அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது ரூ.20,000 ஆக உள்ள குறைந்தபட்ச சம்பளம் ரூ.28000 ஆக உயரலாம்.
மேலும் படிக்க: 10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!
அரசானது, குறைந்தபட்ச சம்பளத்தை நேரடியாக 3.68 மடங்கு அதிகரிக்காமல், 3 மடங்கு அதிகரிக்கக்கூடும் எனவும் ஒரு பிரிவினர் நம்புகின்றனர். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்கக்கூடும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 மடங்கானால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.21,000 ஆக உயரும், அதாவது 3000 ரூபாய் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments