கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், 6 - 8 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தி எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு (Full Curfew)
இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டில்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறியதாவது:
பாதிப்பு குறைகிறது (The vulnerability decreases)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, நோய் பாதிப்பு குறைந்து வருகிறது.
10%ற்கும் மேல் (More than 10%)
நாடு முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில், பெரும்பாலான மாவட்டங்களில், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.
8 வாரங்களுக்கு ஊரடங்கு (Full Curfew for 8 weeks)
இந்த சதவீதம் 10க்கும் கீழே குறையும் போது, ஊரடங்கில் தளர்வை அறிவிக்கலாம்.
கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில், குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கில் எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது.
தளர்வுகள் (Relaxations)
கொரோனா பாசிட்டிவ் விகிதம் முற்றிலும் குறைந்த பிறகே தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அச்சம் நீங்கும் நிலை (Fearless state)
கொரோனாப் பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சிலத் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் தடுப்பூசிப் போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இதன் அச்சம் நீங்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்தால் அடுத்தடுத்த அலைக்கு வாய்ப்பு: பிட்ச் எச்சரிக்கை!
தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!
கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!
Share your comments