A woman who drank 2.5 kg of sesame oil for the welfare of farmers
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு காரணங்களிற்காக பல்வேறு சடங்குகள் நடத்துவது வழக்கம் சில சடங்குகள் அறிவியல் பூர்வமாகவும் சில சடங்குகள் அடி முட்டாள் தனமாகவும் இருப்பது உண்டு.
இப்பதிவில் நாம் விவசாயிகளின் நலனுக்காக 2.5 கிலோ எள் எண்ணெயை குடித்த பெண்மணி பற்றியும். இந்த சடங்கை பற்றியும் விரிவாக காண்போம்.
தெலங்கானா ஆதிலாபாத் மாவட்டம் நார்னூர் மண்டல் மையத்தில் 62 ஆண்டுகளாக பாரம்பரியமாக ஆண்டுதோறும் நடைபெறும் கம்தேவ் ஜாதராவின் போது பழங்குடியினப் பெண் ஒருவர் அமைதிக்காக 2.5 கிலோ எள்ளு எண்ணையை அருந்தினார்.
மகாராஷ்டிராவில் சந்திராபூர் மாவட்டத்தின் ஜிவிட்டி தாலுகாவில் உள்ள கோடேபூர் கிராமத்தைச் சேர்ந்த தோடசம் குலத்தின் தந்தை வழி சகோதரி மெஸ்ரம் நாகுபாய் 2 கிலோ எள் எண்ணெயை உட்கொண்டு திருவிழாவைத் தொடங்கினார். பின்னர் அவருக்கு கோயில் கமிட்டியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வழிபாட்டைத் தொடர்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வீடுகளில் நல்ல விளைச்சல், அதிக மகசூல், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைப் பெறுவார்கள் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது, இந்த சடங்கு 1961 இல் தொடங்கியது. அன்றிலிருந்து இதுவரை 20 தந்தை வழி சகோதரிகள் இந்த சடங்கை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.மேஸ்ரம் நாகுபாய் அடுத்த இரண்டு வருடங்கள் எள் எண்ணெயை உட்கொண்டு சடங்கு செய்கிறார்.
தோடசம் குலத்தினர் காமதேவரை தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். வருடாவருடம் திருவிழாவின் போது தந்தையின் பக்கத்தில் உள்ள சகோதரிகளில் ஒருவர் கையால் செய்யப்பட்ட எள்ளு எண்ணையை மூன்று ஆண்டுகளுக்கு நிறைய குடிக்க வேண்டும் என்று குலத்தில் ஒரு சடங்கு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் அடிலாபாத் ZP (ஜில்லா பரிஷத்) தலைவர் ரத்தோட் ஜனார்தன் மற்றும் ஆசிபாபாத் எம்எல்ஏ ஆத்ரம் சக்கு ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான இச்சடங்கை பின்பற்றுபவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு பதில் அளித்த சில மருத்துவ அதிகாரிகள், ஒரே நேரத்தில் அதிக அளவு எண்ணெய் எடுப்பது உடலுக்கு நல்லதல்ல, அதன் பக்க விளைவுகள் முன்பை விட அதிகமாக இருக்கும், இதுபோன்ற விஷப்பரீட்சைகள் வேறு யாரும் செய்யக்கூடாது என்று கூறினார்கள்.
அதிக அளவில் எண்ணெயை குடித்தால் உடலில் நடக்கும் மாற்றம்:
நீங்கள் சமையல் எண்ணெயைக் குடித்தால், உடல் எண்ணெய் முழுவதையும் உறிஞ்சாது. எனவே, எண்ணெய் பாக்டீரியாவால் ஹைட்ரோபெராக்சைடுகளாக சிதைவதால், மென்மையாக்கப்பட்ட மலம் மற்றும் கடுமையான வாசனையை நீங்கள் அனுபவிக்கலாம். கழிப்பறையில் செலவிட உங்களுக்கு போதுமான நேரம் இருந்தால், இதுபோன்ற சடங்குகளை பின்பற்றலாம்.
மேலும் படிக்க:
Share your comments