நாம் அனைவரிடத்திலும் ஓட்டுநர் உரிமம், ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் இருக்கும். இவை எல்லாம் மிக முக்கியமான ஆவணங்கள் ஆகும். ஆனால் பலருக்கு இந்த ஆவணங்களில் குழப்பம் இருக்கும். ஓட்டுநர் உரிமத்தில் ஒரு முகவரி என்றால், ரேசன் கார்டில் வேறு முகவரி இருக்கும். இப்படியான குழப்பத்துக்கு விரைவில் மத்திய அரசு முடிவுகட்டவுள்ளது. மத்திய அரசு விரைவில் புதிய சேவை ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிகிறது.
புதிய சேவை (New Service)
ஒவ்வொரு ஆவணத்திலும் முகவரி மட்டுமின்றி மற்ற விவரங்களும் மாறி இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த அனைத்து ஆவணங்களிலும் உள்ள விவரங்களை திருத்துவது என்பது கடினமான வேலை தான். ஏனெனில் விவரங்களை மாற்ற ஒவ்வொரு ஆவணத்திற்கும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அவர்களுடைய வேலையை எளிமை படுத்தவே மத்திய அரசு புது திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இது குறித்து புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அமைப்பை வடிவமைத்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அந்த மாற்றங்கள் தானாகவே மற்ற ஆவணங்களிலும் புதுப்பிக்கப்படும்.
அதாவது உங்களது விவரங்களை ஆதார் அட்டையில் அப்டேட் செய்தால், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையிலும் அவை புதுப்பிக்கப்படும். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை.
எல்லா ஆவணங்களும் ஒரே மாதிரியான விவரங்களைக் கொண்டிருக்கும். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போக்குவரத்து, ஊரக மேம்பாடு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இந்த புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
மேலும் படிக்க
கேஸ் சிலிண்டருக்கு மானியம் உங்களுக்கு வருதா இல்லையா? எப்படி தெரிந்து கொள்வது?
PPF திட்டத்தில் குறைந்த வட்டியில் கடன்: இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!
Share your comments