ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 4521 மீட்டர் உயரத்தில் உள்ள படால்சு சிகரத்தில் ஏறி புனேயைச் சேர்ந்த 12 வயது மாணவன் சாதனை (Achievement) படைத்துள்ளார்.
மலையேறுவதில் விருப்பம்
மஹாராஹ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீர் கடாவே. இவரது மகன் சாய் கவாடே (12). ஏழாம் வகுப்பு மாணவர். சிறுவயதிலிருந்து சாய் கவாடேக்கு மலையேறுவதில் மிகவும் விருப்பம். இவரது விருப்பத்தை அறிந்து சாய்க்கு மலையேறுவதற்கு தேவையான பயற்சிகள் (Training) கிடைக்க அவரது தந்தை ஏற்பாடு செய்தார்.
சாதனை
சஹ்யாத்ரி எனப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் பல முறை ஏறியுள்ள சாய் இமயலையில் உள்ள 'ஸ்டோக் காங்ரி சிகரத்திலும், ஆப்ரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்திலும், ஐரோப்பாவில் உள்ள எல்பரஸ் சிகரத்திலும் ஏறி ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். மிக சிறிய வயதில் இந்த சிகரங்களில் ஏறிய ஆசிய சிறுவன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
படால்சு சிகரம்
இந்நிலையில் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 5521 மீட்டர் உயரத்தில் உள்ள படால்சு சிகரத்தில் ஏற சாய் முடிவு செய்தார். ஹிமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் இந்த சிகரம் அமைந்துள்ளது. மனாலியிலிருந்து கடந்த மாதம் 30ல் சாய் உட்பட 16 வீரர்கள் படால்சு சிகரத்தில் ஏறத் துவங்கினர் . அடுத்த நாள் படால்சு சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர். சிகரத்தின் உச்சியில் தேசிய கொடியை (National Flag) ஏற்றி சங்கு ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சாய்.
இது பற்றி சாய் கூறுகையில் ''படால்சு சிகரத்தில் ஒரே நாளில் ஏறியிருக்க முடியும். ஆனால் வழியில் அழகிய மலைப்பகுதிகளை ரசித்துக் கொண்டே சென்றதால் தாமதமாகி விட்டது'' என்றார்.
மேலும் படிக்க
பாம்பு வடிவில் கேக்: அசத்திய கேக் தயாரிப்பாளர்!
வெப்பநிலை மாற்றத்தால் இந்தியாவில் பாதிப்பு: ஆய்வில் தகவல்!
Share your comments