New Scheme initiated by MK Stalin
கொரோனா நெருக்கடியால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்த நிலையில் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை அகற்ற நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடு தேடி கல்வி என்ற புதிய திட்டத்தின் கீழ் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை சீராக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு ஒரு நாள் 1 மணி முதல் 2 மணி நேரம் வரை 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, திட்டம் செயல்படவுள்ளது.
இந்த நிலையில், முதல் கட்டமாக இந்த திட்டத்தை விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அக்டோபர் 27 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இதற்கு,மரக்காணம் அருகே உள்ள முதலியார்குப்பம் பகுதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
மேலும் படிக்க:
71 லிட்டர் பெட்ரோல் Free! விபரம் உள்ளே
குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகளை அறிமுகப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் !
Share your comments