வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அட்சய திருதியை என்றால் பொதுவாக இந்திய மக்கள் தங்கம் நகைகள், வெள்ளி, பாத்திரங்கள் போன்ற பொருட்களை வாங்குவது வழக்கம். அவ்வகையில், இந்தாண்டு அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க சரியான முகூர்த்த நேரத்தை பார்க்கலாம்.
ஹால்மார்க் முத்திரை
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும். ஏனெனில், தங்கம் விற்பனைக்கான விதிமுறைகளை அரசு திருத்தியுள்ளது. எனவே, நீங்கள் தங்கம் வாங்கும்போது அது தரமான தங்கமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எல்லா தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, நீங்கள் தங்கம் வாங்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்பனையாகும் அனைத்து தங்க நகைகளுக்கும் HUID எனப்படும் ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, நீங்கள் வாங்கும் தங்க நகையில் 6 இலக்க HUID ஹால்மார்க் அடையாள எண் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின் வாங்க வேண்டும்.
அட்சய திருதியை முகூர்த்த நேரம்
ஏப்ரல் 22ஆம் தேதி அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதற்கான முகூர்த்த நேரங்கள்:
- காலை முகூர்த்தம் - 7.49 மணி முதல் 9.04 மணி வரை
- பிற்பகல் முகூர்த்தம் - 12.20 மணி முதல் 5.13 மணி வரை
- மாலை முகூர்த்தம் - 6.51 மணி முதல் 8.13 மணி வரை
- இரவு முகூர்த்தம் - 9.35 மணி முதல் 1.42 மணி வரை
மேலும் படிக்க
தனியாருக்கு மாறும் பொதுத் துறை வங்கிகள்: எதிர்க்கும் அரசு ஊழியர்கள்!
தங்க நகை வாங்கும் போது இதைப் பார்த்து வாங்குங்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Share your comments