பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தின் (One Rank One Pension) பென்சன் திருத்தம் செய்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பென்சன் திருத்தம்
இந்த பென்சன் திருத்தம் 2019 ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்கெனவே பென்சன் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களுக்கும், 2018ஆம் ஆண்டில் பணி ஓய்வுபெற்ற ராணுவ படை வீரர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பென்சன் சராசரி தொகை அடிப்படையில் பென்சன் தொகை நிர்ணயிக்கப்படும்.
ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் (One Rank One Pension)
ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தின் கீழ் பென்சன் திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ராணுவ வீரர்களின் நலன் கருதி அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் நலன் கருதி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்காக ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தின் கீழ் பென்சன் திருத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் பொருந்தும்
2019ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை பணி ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 2014 ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தின் கீழ் பென்சன் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 25.13 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
இதுமட்டுமல்லாமல், குடும்ப பென்சன் வாங்குவோர், போர்களால் விதவையானவர்கள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் ஆகிய ஓய்வூதியதாரர்களுக்கும் பென்சன் திருத்தத்தின் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் நிலுவைத் தொகை அரையாண்டு வாரியாக 4 அரையாண்டுகளில் தவணை முறையில் செலுத்தப்படும் எனவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரதீர சாகச விருது (Gallantry award) பெற்றவர்களுக்கு ஒரே தவணையில் பென்சன் நிலுவைத் தொகை செலுத்தப்படும்.
மேலும் படிக்க
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்!
Share your comments