தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி தமிழ் புலவர் பட்டவர்களுக்கு இந்த ஆணையத்தில் வேலை உறுதியாகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இடம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,சென்னை
காலி பணியிடங்கள் : 36
பணி (Job)
Executive Officer Grade IV
கல்வி தகுதி (Educational Qualification)
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் படித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் “தமிழ்ப் புலவர்” என்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age limit)
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் (Salary)
தகுதியின் அடிப்படையில் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை மாதந்தோறும் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் (Fee)
விண்ணப்ப கட்டணமாக ரூ.150ம் மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100ம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கான தேர்வானது 11.09.2022ம் தேதி நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி
18.06.2022
மேலும் படிக்க...
Share your comments