1. மற்றவை

விவசாயத் தொழில் முனைவோராக வேண்டுமா? அரிய வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Want to be an agricultural entrepreneur? Rare opportunity!

Credit : Makeintern

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் சார்பில், ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

பட்டயப்படிப்பு (Diploma)

இந்த ஓராண்டுப் பட்டயப்படிப்பில் சேர்வதன் மூலம் பின்வரும் பயன்களை மாணவர்கள் அடைய முடியும்.

படித்தால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of studying)

 • சுய வேலைவாய்ப்பு பெறலாம்.

 • இடுபொருள் விற்பனையாளர் ஆகலாம்

 • இடுபொருள் உற்பத்தியாளர் ஆகலாம்.

 • விவசாயத் தொழில் முனைவோர் ஆகலாம்.

 • உரக் கடை மற்றும் பூச்சி மருந்துக்கடை வைக்கலாம்.

 • வேளாண் விதைக் கடை வைக்கலாம்.

 • தாவர மருந்து மையம் வைக்கலாம்.

 • வங்கிகளில் உதவி பெற முடியும்.

 • விவசாயத் தொழில் பயிற்சி அளிப்பவர்களாகச் செயல்படலாம்.

 • நீர் மேலாண்மைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு

 • விவசாய எந்திரங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

தகுதி (Qualification)

10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள்

பயிற்சி காலம் (Training Period)

ஓராண்டு - இரண்டு பருவங்கள்

நேர்முகப்பயிற்சி (Interview)

நேர்முகப்பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும்.

பயிற்சிக் கட்டணம் (Fees)

ஆண்டுக்கு ரூ.25,000/-

வயது (Age)

வயது வரம்பு இல்லை

அரிய வாய்ப்பு (Rare opportunity)


தங்களது மாவட்டங்களில் உள்ள வேளாண் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு

கூடுதல் விவரங்களுக்கு,
இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் என்ற முகவரியிலோ,  0422-6611229, 9442111048, 9489051046 என்ற எண்களிலோ,odl@tnau.in என்ற மின்னஞ்சல் மூலமாகவே, www.tnau.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

TNAU பட்டமளிப்பு விழா- மாணவ- மாணவிகளுக்கு அழைப்பு!

மரம் நட மறந்தால், இந்தியா விவசாயத்தை இழக்க நேரிடும்- சத்குரு அறிவுறுத்தல்!

கோடையில் உடல் நலம் காக்கும் கீரைகள்! ஆர்வத்துடன் உழைக்கும் விவசாயிகள்

English Summary: Want to be an agricultural entrepreneur? Rare opportunity!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.