தனியார் வங்கியான கர்நாடகா வங்கி (Karnataka Bank) வைப்பு நிதித் திட்டங்களுக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இதன்படி, 2 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் மாறியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 5.5% வட்டி வழங்குகிறது கர்நாடகா வங்கி. சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமாக 6% வட்டி வழங்குகிறது.
புதிய வட்டி விகிதங்கள் (New Interest Rates)
- 7 - 45 நாட்கள் : 3.4%
- 46 - 90 நாட்கள் : 4.9%
- 91 - 364 நாட்கள் : 5%
- 1 ஆண்டு - 2 ஆண்டு : 5.1%
- 2 ஆண்டுக்கு மேல் - 5 ஆண்டு : 5.4%
- 5 ஆண்டுக்கு மேல் - 10 ஆண்டு : 5.5%
சீனியர் சிட்டிசன்களுக்கு (For Senior citizens)
- 7 - 45 நாட்கள் : 3.4%
- 46 - 90 நாட்கள் : 4.9%
- 91 - 364 நாட்கள் : 5%
- 1 ஆண்டு - 2 ஆண்டு : 5.5%
- 2 ஆண்டுக்கு மேல் - 5 ஆண்டு : 5.8%
- 5 ஆண்டுக்கு மேல் - 10 ஆண்டு : 6%
மேலும் படிக்க
முதலீட்டின் பலனை பாதிக்கும் கசிவுகள்: கண்டறிந்து மேம்படுத்துவது எப்படி?
Share your comments