1. மற்றவை

CUET PG :ஜுலை கடைசியில் முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு -யுஜிசி!

Dinesh Kumar
Dinesh Kumar
CUET PG Entrance Examination for Postgraduate Courses at the end of July...

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET PG) ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும்.42 மத்தியப் பல்கலைக் கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை மற்றும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதையடுத்து, மே முதல் வாரத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

இந்நிலையில், நாட்டில் உள்ள முதுநிலைப் படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் (மே 19) முதல் nta.ac.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை:

CUET (UG) 2022 இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://cuet.nta.nic.in/ இல் பார்வையிடவும்.

கல்விச் சான்றிதழ், வயது, சாதிச் சான்றிதழ், இருப்பிடம், சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (10 kb முதல் 200 kb வரை), கையொப்பம், மின்னஞ்சல் முகவரி போன்ற பிற பொதுவான விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.

முக்கிய நாட்கள்: விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமையின் cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18-06-2022. அன்றிரவு 11.50 மணி வரை அதற்கான செலுத்தப்படும் கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படும்.

CUET PG தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும்

CUET UG க்கு இதுவரை 10.46 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். CUET-UG பதிவு செய்வதற்கான கடைசி தேதி மே 22 ஆகும்.

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களுக்கு சென்று நிலைமையை அவ்வப்போது அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://cuet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். cucet@nta.ac.in. மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.

மேலும் படிக்க:

நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் மட்டுமே மாணவர் சேர்க்கை: UGC அறிவுறுத்தல்!

CUET நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு!

English Summary: CUET PG: General Entrance Examination for Postgraduate Courses at the end of July - UGC! Published on: 20 May 2022, 12:47 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.