1. மற்றவை

DigiLocker: பான் கார்டை இனி வாட்ஸ்அப்-இல் பெறலாம்!

Poonguzhali R
Poonguzhali R
DigiLocker: Pan Card Now Available On WhatsApp!

பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாகணப்பதிவுச் சான்றிதழ் முதலான ஆவணங்களை, வாட்ஸ்அப்பிலேயே டிஜிலாக்கர் சேவையின் வாயிலாகப் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். இது வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க் வடிவில் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த சேவை குறித்த முழு விவரங்களை இப்பதிவு விளக்குகிறது.

டிஜிலாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இது புதிய வழியில் திறக்கும் வெளிப்புற இணையதளம் ஆகும். அதன் பீட்டா பதிப்பு ஏற்கனவே அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. டிஜிலாக்கர் என்பது இயற்பியல் ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைப்பதையும், ஏஜென்சிகள் முழுவதும் மின் ஆவணங்களைப் பகிர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த போர்ட்டலின் உதவியுடன், பதிவு செய்யப்பட்ட களஞ்சியங்கள் மூலம் மின் ஆவணங்களின் பகிர்வுகள் செய்யப்படும். இதன் மூலம் ஆன்லைனில் ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யப்படும். குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மின்னணு ஆவணங்களைப் பதிவேற்றலாம். அதோடு, மின்-கையொப்ப வசதியைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கையொப்பம் இடலாம். இந்த டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை அரசு நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய டிஜிலாக்கர் தற்போது வாட்ஸ் அப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சேவையானது, மக்கள் தங்களது அத்தியாவசிய ஆவணங்களை எளிதாக அணுகுவதற்கு வழிவகையாய் அமைகிறது.

அனைத்து மக்களுக்கும் “டிஜிட்டல் அதிகாரம் அளித்தல்” என்பதை வழங்குவதே இந்த சேவையின் முக்கிய நோக்கம் ஆகும். இது குடிமக்களுக்கு டிஜிட்டல் ஆவண வேலட்டை வழங்கி, அதில் அனைத்து மக்களின் முக்கிய ஆவணங்களைச் சேமித்து எளிதாக அணுக வழி செய்கிறது.

இந்த சேவையின் மூலம் பெறும் ஆவணங்களாகக் கீழ்கண்டவை இருக்கின்றன.

  • ஓட்டுனர் உரிமம்
  • பான் கார்டு
  • பத்தாம் வகுப்புத் தேர்ச்சி சான்று
  • பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி சான்று
  • வாகனப் பதிவுச் சான்று
  • இரு சக்கர வாகனத்திற்கான காப்பீடு
  • பிற காப்பீட்டு ஆவணங்கள்

ஆகியன இச்சேவையின் மூலம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

செயல்முறை

  • வாட்ஸ் அப்பில், 9013151515 எனும் எண்ணிற்கு Hai அல்லது DigiLocker என்பதை அனுப்ப வேண்டும்
  • ஆவணங்களின் பெயர்கள் திரையில் வரும்.
  • உதாரணமாக, பான் கார்டு, ஓடுநர் உரிமம, வாகனப் பதிவு சான்று போன்ற ஆவணங்கள் திரையில் தெரியும்.
  • அவற்றில் எந்த ஆவணம் தேவையோ அதை சேமித்துக் கொள்ளலாம்.

டிஜிலாக்கரில் தற்போது வரை ஏறக்குறைய நூறு மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சேவையானது, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நோக்கி நாட்டினை வழிநடத்த வலுப்படுத்தும் செயலாக இருக்கின்றது.

மேலும் படிக்க

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?

விவசாயத்திற்கு 5 லட்சம் கடன் பெறலாம்! விவரம் உள்ளே!

English Summary: DigiLocker: Pan Card Now Available On WhatsApp! Published on: 24 May 2022, 12:56 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.