திருச்சி மாவட்டம் M.R பாளையத்தில் இயங்கி வரும் நாளந்தா வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவ, மாணவிகளின் கண்காட்சி கடந்த மார்ச் 21 ஆம் தேதியன்று மிகச்சிறப்பான முறையில் நடை பெற்றது.இந்த கண்காட்சியானது கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளர் திருமதி.S.அல்லி இங்கர்சால் , முதல்வர் முனைவர் C.சேகர் அவர்களின் தலைமையில், குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் பா.குணா அவர்களின் வழிகாட்டுதல்படி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் பல்வேறு அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் அறிவியல் படைப்புகளுக்கு விளக்கமும் அளித்தனர்.
இதில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை (Integrated Disease Management), ஒருங்கிணைந்த பூச்சிகள் மேலாண்மை (Integrated Pest Management), ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து (Integrated Plant nutrient Management) ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பாரம்பரிய கரைசல்கள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை காட்சிக்கு வைத்தனர்.
பாரம்பரிய கரைசல்கள்:
ஜீவாமிர்தம்,பஞ்சகாவியம்,தசகாவ்யா,அமிர்தகரைசல்,ஐந்திலை கரைசல், 3 ஜி கரைசல், கலை மேலாண்மை கரைசல், மண்புழு ஊக்கி, மண்புழு குளியல் நீர், பழகாடி, குணபஜலம், தேமோர் கரைசல், முட்டை அமினோ அமிலம், மீன் அமினோ அமிலம்.
பாரம்பரிய நெல் ரகங்கள்:
கருப்பு கவனி, சீரக சம்பா, ஆத்தூர் கிச்சலி, குள்ள கார், மல்லிகைப்பூ சம்பா, பிள்ளை மிளகு, குளியடிசன், காட்டு குத்தலம், கொத்தமல்லி சம்பா, துளசி சம்பா, வாழைப்பூ சம்பா, மணி சம்பா மற்றும் பல.
மேலும் விவசாயிகளுக்குப் பயன்படும் *உழவன் செயலி*, மழை எச்சரிக்கை கருவி(Rain Detector), ஆளில்லா விமானம் (Drones), காளான் உற்பத்தி (Mushroom Production),பஞ்சவாடி,மியாவாக்கி காடு(Miyawaki forest),சூரிய நீர்ப் பாசனம்,சூரிய வேலி,சிறுதானிய உணவு கண்காட்சிஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டு நான்காம் ஆண்டு மாணவர்களால் சிறந்த முறையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் சென்ற தொழிற் சாலை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இவற்றை காண்பித்தார்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இதில் எம் ஆர் பாளையம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாரியை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கு பெற்றனர் மேலும் இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் புதிய வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விவரித்து சிறப்பித்தனர்.
தகவல்: சகாயா, வேளாண் மாணவி, நாளாந்த வேளாண் கல்லூரி
மேலும் படிக்க:
பான் ஆதார் இணைப்பு அல்லது நிலை அறிய: என்ன செய்ய வேண்டும்?
சம்பள வர்கத்தின் கவனத்திற்கு: பான் ஆதார் இணைக்க வில்லை என்றால் பேரும் இழப்பு நேரிடலாம்
Share your comments