கொரோனா பிரச்சினை வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது போன்ற சமயங்களில் சேமிப்பின் மீதான முக்கியத்துவம் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். சேமிப்புக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. வங்கிகள் வாயிலான சேமிப்புகள் பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதுவும் ஃபிக்சட் டெபாசிட் (FD) எனப்படும் நிலையான வைப்பு நிதித் திட்டங்களில் அதிகப் பேர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit)
ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி முதலீடு செய்தால் நல்லது. சமீபத்தில்தான் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதன் பின்னர் பல்வேறு வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.
தற்போதைய நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று இங்கே பார்க்கவும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
- வட்டி - 2.90% முதல் 5.50%
- மூத்த குடிமக்கள் - 3.40% முதல் 6.30%
HDFC வங்கி
- வட்டி - 2.75% முதல் 5.75%
- மூத்த குடிமக்கள் - 3.25% முதல் 6.50%
ஐடிபிஐ வங்கி
- வட்டி - 2.70% முதல் 5.75%
- மூத்த குடிமக்கள் - 3.20% முதல் 6.50%
கோடக் மஹிந்திரா வங்கி
- வட்டி - 2.50% முதல் 5.90%
- மூத்த குடிமக்கள் - 3.00% முதல் 6.40%
ஆர்பிஎல் வங்கி
- வட்டி - 3.25% முதல் 6.65%
- மூத்த குடிமக்கள் - 3.75% முதல் 7.15%
பஞ்சாப் நேஷனல் வங்கி
- வட்டி - 3.00% முதல் 5.60%
- மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 6.10%
கனரா வங்கி
- வட்டி - 2.90% முதல் 5.75%
- மூத்த குடிமக்கள் - 2.90% முதல் 6.25%
ஆக்சிஸ் வங்கி
- வட்டி - 2.50% முதல் 5.75%
- மூத்த குடிமக்கள் - 2.50% முதல் 6.50%
பேங்க் ஆஃப் பரோடா
- வட்டி - 2.80% முதல் 5.35%
- மூத்த குடிமக்கள் - 3.30% முதல் 6.35%
IDFC ஃபர்ஸ்ட் பேங்க்
- வட்டி - 3.50% முதல் 6.50%
- மூத்த குடிமக்கள் - 4.00% முதல் 7.00%
பேங்க் ஆஃப் இந்தியா
- வட்டி - 2.85% முதல் 5.20%
- மூத்த குடிமக்கள் - 3.35% முதல் 5.95%
பஞ்சாப் & சிந்து வங்கி
- வட்டி - 3.00% முதல் 5.40%
- மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 5.90%
மேலும் படிக்க
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: சூப்பர் அறிவிப்பு!
Fixed Deposit வட்டி அதிகரிப்பு: சீனியர் சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்!
Share your comments