தேசிய விதைக் கழகத்தில் காலியாக உள்ள 89 பணியிடங்களை நிரப்புவதற்கான (NSC- National Seed Corporation Recruitment 2023 ) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான, கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்ந்தெடுக்கப்படும் முறைகள் குறித்த விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
தேசிய விதைக் கழகம் ஒன்றிய அரசின் வேளாண் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 1963-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் மூலம் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறி உட்பட 78 பயிர்களின் கிட்டத்தட்ட 567 வகையான சான்றளிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து விவசாயத்துறைக்கு உதவி வருகிறது.
இந்நிலையில் தேசிய விதைக் கழகத்தில் காலியாக உள்ள 89 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Junior Officer, Management Trainee, Trainee என்கிற பிரிவுகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடத்திற்கான ஆட் தேர்வானது, எழுத்துத் தேர்வு (CBT), நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 25, 2023
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 10வது, 12வது, ஐடிஐ, பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ நிலைகளில் பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் தேசிய விதைக் கழக ஆட்சேர்ப்பு 2023க்கு விண்ணப்பிக்கலாம். (பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி வேறுபடும்)
வயது வரம்பு: அரசின் இட ஒதுக்கீடு படி பணியிடங்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. அதனை தெரிந்துக்கொள்ள காலி பணியிடம் குறித்த அறிவிப்பினை கீழ்காணும் லிங்கின் மூலம் காண்க.
https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf
NSC ஆட்சேர்ப்பு 2023-க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படிகள் பின்வருமாறு-
படி 1: தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (NSCL) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். ( https://www.indiaseeds.com/current-career.html )
படி 2: சமீபத்திய பகுதிக்கு முகப்புப்பக்கத்தின் இடது பக்கத்தில் பார்க்கவும்.
படி 3: என்எஸ்சி ஆட்சேர்ப்பு 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்று லிங்கை கிளிக் செய்யவும்.
படி 4: "புதிய பதிவு" இணைப்பை கிளிக் செய்யவும். உங்கள் தனிப்பட்ட தகவல், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை நிரப்பவும்.
படி 5: பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு மின்னஞ்சல் மற்றும் செய்தி அனுப்பப்படும்.
படி 6: பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை நிரப்பவும்.
படி 7: தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியான வடிவத்தில் பதிவேற்ற வழிமுறைகளைப் பின்பற்றவும்.
படி 8: தேவைப்பட்டால், கிடைக்கக்கூடிய கட்டண முறைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
படி 9: முடிந்ததும், NSC விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி அச்சிடவும். எதிர்கால தேவைக்காக அதை வைத்திருங்கள்.
வேளாண் துறை சார்ந்த படிப்பினை படித்த மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறுங்கள் என National Seed Corporation சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
உடம்பை குறைக்க முடிவு பண்ணிட்டா இந்த பானங்களை மிஸ் பண்ணாதீங்க
மினிமம் பேலன்ஸ் தலைவலி இனி வேண்டாம்: Savings account-ல் புதிய வசதி
Share your comments