1. மற்றவை

மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி: இந்த திட்டம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan

Senior citizens

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அக்டோபர் 31அம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால், இம்மாத இறுதி வரை சீனியர் சிட்டிசன்கள் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கி பயன்பெற முடியும்.

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கியபோது சீனியர் சிட்டிசன்கள் நலன் கருதி எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தின. இத்திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டது. சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களிலேயே முதலீடு செய்கின்றனர். எனவே, ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக சுமார் 0.50% வட்டி கூடுதலாக வழங்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காலத்தில் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறைந்தன. எனவே சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி, ஐசிஐசிஐ வங்கியும் கோல்டன் யெர்ஸ் ஃபிக்சட் டெபாசிட் (ICICI Golden Years FD) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.60% வட்டி வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அக்டோபர் 7ஆம் தேதியுடன் கோல்டன் யெர்ஸ் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் முடிவுக்கு வருவதாக ஐசிஐசிஐ வங்கி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஐசிஐசிஐ கோல்டன் யெர்ஸ் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் அக்டோபர் 31ஆம்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, சீனியர் சிட்டிசன்கள் அக்டோபர் 31ஆம் தேதி வரை இத்திட்டத்தில் கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

மேலும் படிக்க

பென்சனர்களுக்கு புதிய வசதி: இனி எல்லாமோ ரொம்ப ஈசி தான்

English Summary: Good News For Senior Citizens: The Scheme Is Extended Till October 31!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.