முதியவர்களுக்காக மத்திய அரசுபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. மூத்த குடிமக்களுக்கான இந்த அரசாங்க மானிய ஓய்வூதிய திட்டத்தை ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது எல்ஐசி நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்நிலையில் வயது வரம்பு? வட்டி விகிதம்? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.
LIC PMVYY திட்டம்
மத்திய அரசின் பென்சன் திட்டத்தில் சேர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 60 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து எல்ஐசி அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ? அல்லது இணையதள வாயிலாக இத்திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம். சந்தாதாரர் தேர்வு செய்யும் ஓய்வூதிய முறையைப் பொறுத்து LIC PMVYY 10 ஆண்டுபாலிசி காலத்திற்கான ஓய்வூதியத்தை வழங்குகிறது.
இத்திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்துக்கொள்ளலாம். மாதம் மாதமாக, ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டு அல்லது ஓராண்டு என சந்தாதாரர்கள் தேர்வு செய்து பென்சனைப் பெற முடியும். இத்திட்டத்தில் சேருவதற்கு வருகின்ற மார்ச் 31, 2023 கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பித்து கொள்ளவும். இதற்கான வட்டி விகிதம் 7.40 சதவிதம் ஆகும். குறிப்பாக காலாண்டு ஓய்வூதியத்திற்கு ரூ. 1.62 லட்சமும், ஆறுமாதங்களுக்கு ரூ. 1.59 லட்சம் மற்றும் ஆண்டுக்கு ரூ. 1.56 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 9250 ஆகும்.
ஒரு மூத்த குடிமக்கள் PMVVY திட்டங்களில் சேர்வதற்கு 15 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. பாலிசி காலத்தின் போது ஒருவர் எப்போது வேண்டுமானாலும் பாலிசியை சரண்டர் செய்யக்கூடிய அம்சம் இடம் பெற்றுள்ளது. மேலும் 10 வருட பாலிசி காலம் முடிந்த பிறகு, ஓய்வூதியத்தின் கடைசி தவணையுடன் பாலிசிதாரருக்கு திருப்பித் தரப்படும்.
பென்சன் தொகை
இத்திட்டத்தின கீழ், மூத்த குடிமக்கள் பெறக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்தொகை குறித்த விபரங்கள் எல்ஐசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச PMVVY ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000, காலாண்டுக்கு ரூ.3,000, அரையாண்டுக்கு ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.12,000 எனவும் அதிகபட்ச PMVVY ஓய்வூதியமாக மாதம் ரூ.9,250, காலாண்டுக்கு ரூ.27,750, அரையாண்டுக்கு ரூ.55,500, ஆண்டுக்கு ரூ.1,11,000 வரை பெற முடியும். ஆனால் நீங்கள் செலுத்தக்கூடிய சந்தா தொகையைப் பொறுத்து உங்களுக்கு பென்சன் கிடைக்கும்.
மேலும் படிக்க
ஆதார் அட்டைக்கு ரூ.4 லட்சம் கடன் கிடையாது: பொதுமக்களே உஷார்!
EPFO சந்தாதாரர்கள் கடகட உயர்வு: ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பயனாளிகளா?
Share your comments