1. மற்றவை

குழந்தைகளின் வருங்காலத்திற்கு எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம்?

R. Balakrishnan
R. Balakrishnan
Children's Future

சொந்த வீடு, ஓய்வு கால திட்டமிடல், வாகனம் போன்ற இலக்குகளுடன் குழந்தைகளின் எதிர்காலமும் பெற்றோரின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக அமைகிறது. குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணத்தை மனதில் கொண்டு முதலீடு செய்வதும் அவசியமாகிறது.

அதிலும் குறிப்பாக உயர்கல்விக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் எதிர்கால கல்விக்கு சரியான வழியில் முதலீடு செய்வது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகள் எதிர்காலத்திற்கு முதலீடு செய்யும் போது வழக்கமாக பலரும் செய்யும் தவறுகளையும் தவிர்ப்பது அவசியம்.

பணவீக்கம்:

உயர்கல்விக்கான திட்டமிடும் போது, கல்வி செலவை கணக்கிட்டு செயல்படுவது அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர். ஆனால், கல்விக்கான செலவில் பணவீக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொள்ள பெரும்பாலானோர் தவறிவிடுகின்றனர். இது போதுமான தொகை கையில் இருப்பதை பாதிக்கலாம்.

தாமதம் கூடாது:

பணவீக்கத்தை கருத்தில் கொள்ளாமல் இருப்பது முதல் தவறு என்றால், முதலீடு செய்வதை தாமதமாக்குவது இரண்டாவது பெரிய தவறாகிறது. தாமதமாக துவங்கும் போது முதலீட்டின் பலன் குறைவாக இருக்கும். ஆரம்பத்தில் இருந்து முதலீடு செய்தால் கூட்டு வட்டியின் ஆற்றலால் அதிக பலன் பெறலாம்.

பரவலாக்கம்:

முதலீட்டிற்கு தேர்வு செய்யும் வழிகளிலும் கவனம் தேவை. குறிப்பிட்ட ஒரு வகையான முதலீட்டை மட்டும் மேற்கொள்வது பலனை குறைக்கும். நீண்ட கால நோக்கில் நல்ல பலன் பெற வேண்டும் எனில் முதலீட்டில் பரவலாக்கம் தேவை. கடன் சார் முதலீட்டில் ஒரு பகுதியும், சமபங்கு முதலீட்டில் ஒரு பகுதியும் இருப்பது நல்லது.

காப்பீடு பாதுகாப்பு:

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முதலீடு (Investment) செய்யும் போது, முதலீட்டிற்கு எதிர்பாராமல் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கு எதிராக பாதுகாப்பு தேவை. மருத்துவ நெருக்கடி போன்றவை முதலீட்டை பாதிக்கலாம் என்பதால், போதுமான காப்பீடு பெற்றிருப்பதும் மிகவும் அவசியம்.

உறுதி தேவை:

அவசர தேவை ஏற்படும் போது, குழந்தைகளின் எதிர்கால நிதியில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்வதும் பலர் செய்யும் தவறாக அமைகிறது. பணத்தை பாதியில் விலக்கி கொள்வது பலனை பாதிக்கும். இந்த நிலையை தவிர்க்க அவசர கால நிதியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க

ஒரே வீட்டில் 90 விஷப் பாம்புகள்: செம ஷாக்கான ஓனர்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தனி மனித சுத்தம் அவசியம்!

English Summary: How can you invest in your children's future? Published on: 19 October 2021, 09:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.