வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் அனைவருக்கும் பாஸ்போர்ட் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் மைனர் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்கு எவ்வாறு பாஸ்போர்ட் அப்ளை செய்வது? எவ்வாறு வாங்குவது போன்ற வழிமுறைகளை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி என அறிந்திருந்தாலும் மைனர் பாஸ்போர்டுகளுக்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருக்கமாட்டார்கள். தங்கள் குழந்தைகளின் பாஸ்போர்ட்-ஐக் குழந்தைகளின் பாஸ்போர்ட்-ஐ எவ்வாறு பெறலாம் எனத் தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
தேவையான ஆவணங்கள்
- குழந்தைகளின் முழுவிவரம்
- பெற்றோரின் முழுவிவரம்
- பிறப்புச் சான்றிதழ்
- வீட்டு முகவரி
- அதோடு, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளை விண்ணப்பிக்கக் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி இருத்தல் வேண்டும்.
- பெற்றோரின் பாஸ்போர்ட்டில் அவர்களின் பெயர் இருப்பதும் அவசியம்.
மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்கு செல்லுதல் வேண்டும்.
- அதன் பிறகு, முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள புதிய பயனர் பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள பயனர் உள்நுழைவு என்ற தெரிவு இருக்கும்.
- நீங்கள் முன்னரே இந்த போர்ட்டலில் பதிவு செய்திருந்தால், முன்னரே உள்ள பயனர் உள்நுழைவு விருப்பத்திற்குச் சென்று ஐடி, கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
- இல்லையெனில், புதிய பயனர் பதிவு என்ற விருப்பத்தை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திப் செய்து, நீங்கள் யாருடைய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நிரப்புதல் வேண்டும்.
- இறுதியாக, பணம் செலுத்திய பிறகு படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க: பிளாஸ்டிக்கு நாடு முழுதும் தடை! மீறினால் என்ன ஆகும்?
குறிப்பாக, மைனர் பாஸ்போர்ட் 5 ஆண்டுகள் அல்லது நபருக்கு 18 வயது வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேண்டுவோர் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!
தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?
Share your comments