1. மற்றவை

567 கிராமங்களில் சிக்னல் இல்லை, 51% பெண்களிடம் போனே இல்லை

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

குஜராத் மாநிலத்தில் 567 கிராமங்களில் சிக்கனலே இல்லை மற்றும் 51% பெண்களிடம் சொந்தமாக போனே இல்லை என்று மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுஹான் கூறியுள்ளார்.

குஜராத்தில் 51% பெண்களிடம் சொந்தமாக செல்போன் இல்லை மற்றும் 567 கிராமங்களில் செல்போன் சிக்னலே கிடைக்காது என்றும் மக்களவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசிங் சவுஹான் தெரிவித்துள்ளார். மேலும் , 800 கிராமங்களில் 4ஜி சிக்னலே இன்னும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் தெலுங்கானா காங்கிரஸ் உறுப்பினர் அனுமுலா ரேவந்த் ரெட்டி எழுப்பிய கேள்வி குறித்து பதிலளித்த மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுஹான் குஜராத்தின் செல்போன் பயன்பாடு குறித்த புள்ளி விபரத்தை அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

குஜராத்தில் இருக்கும் 18,425 கிராமங்களில் 567 கிராமங்களில் சிக்னலே இல்லாத காரணத்தால் மக்கள் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

51% பெண்களிடம் செல்போன் இல்லை, மேலும் 821 கிராமங்களில் இன்னும் 4ஜி சேவை கூட தொடங்கப்படவில்லை. மேலும் அம்மாநிலத்தில் 48.80% பெண்கள் மட்டுமே சொந்தமான செல்போன் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். 51.20 % குஜராத் பெண்கள் சொந்தமாக செல்போன் பயன்படுத்தாமல் உள்ளதாக அவர் புள்ளி விவரங்களை தெளிவாக விளக்கினார்.

தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், 50 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே செல்போன் பயன்படுத்துவதாக 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கின்றதாக கூறியுள்ளார்.

பாலின ஏற்றத்தாழ்வு இதுபற்றி பொருளாதார அறிஞர் இந்திரா ஹிர்வே தெரிவிக்கையில், "குஜராத்தில் இருக்கும் ஆண்கள் பெண்கள் இடையிலான பாலின ஏற்றத்தாழ்வு இதில் வெளிப்படுகிறது. பெண்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுக்கூடாதென தடுக்கப்படுகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு வருவாயும் கிடைப்பதில்லை." என்றார்.

இதுகுறித்து பொருளாதார அறிஞர் இந்திரா ஹிர்வே கூறுகையில், "குஜராத்தில் இருக்கும் ஆண்கள் பெண்கள் இடையிலான பாலின ஏற்றத்தாழ்வு இதில் வெளிப்படுகிறது. பெண்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுக்கூடாதென தடுக்கப்படுகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு வருவாயும் கிடைப்பதில்லை." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொலைதொடர்புத்துறை நிபுணர் விஷால் கூறுகையில், "செல்போன் சிக்னல் பிரச்சனையில் பெரிதும் பாதிக்கப்படுவது பழங்குடியின மக்கள்தான். அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும் இந்த காலத்திலும் செல்போன் இணைப்பை முழுமையாக வழங்க முடியவில்லை, என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் மாவட்டங்கள் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் டாங் மாவட்டத்தில் தோராயமாக 90 கிராமங்களில் செல்போன் இணைப்பு இல்லை. அதேபோல் கட்ச் மாவட்டத்தில் 84 கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காது. அதை தொடர்ந்து நர்மதா மாவட்டத்தில் 64 கிராமங்களில் செல்போன் இணைப்பு வழங்கப்படவில்லை.

லாபநோக்கில் செல்போன் நிறுவனங்கள் குறைவாக வருவாய் ஈட்டும் மக்கள் வசிக்கும் பகுதிகள் அல்லது செல்போன் பயன்பாடு குறைவாக இருக்கும் பகுதிகளில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் செல்போன் கோபுரங்களை வைக்க மறுக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் செல்போன் சேவைகள் இல்லாத கிராமங்கள் இன்னும் இருப்பது வினோதமாக உள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக தோல்வி-சித்தராமையா குற்றச்சாட்டு

ஆளில்லா விமானம் தெளிக்கும் நடவடிக்கை குறித்த நேரடி செயல் விளக்கம்

English Summary: In Gujarat 567 villages have no signal and 51% women do not have a phone Published on: 15 February 2023, 12:31 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.