இந்தியாவின் முதல் இலவச மருத்துவக் கல்லூரியில் ஐந்தாண்டுகள் படித்து, டாக்டரானால், ஐந்தாண்டுகள் ஏழைகளுக்கு சேவையாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், தாங்கள் தேர்வு செய்யும் தொழில் வழியை தொடரலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
கர்நாடகாவில் உள்ள முத்தெனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாரம் திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் மற்றும் முற்றிலும் இலவச மருத்துவக் கல்லூரி என்று இது அழைக்கப்படுகிறது. இங்கு மாணவர்கள் கட்டணம், விடுதி மற்றும் உணவுக் கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், இது ரூ. 400 கோடி செலவில் அமைக்கப்பட்டு, சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது.
பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளைப் போலவே, ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், விடுதிகள், ஆடிட்டோரியம், பணியாளர்கள் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு வசதிகளைத் தவிர, ஒரு இலவச மருத்துவமனை மற்றும் ஒரு கல்வித் தொகுதி சார்ந்த கல்வியைக் கொண்டுள்ளது. அதன் மொத்த பரப்பளவு 325,000 சதுர அடி என்று இது கூறப்படுகிறது.
யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்றாலும், இதன் முதன்மை இலக்கு என்பது குடும்பத்தில் முதல் தலைமுறை கற்பவர்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் இருந்து பின்தங்கிய மாணவர்களுக்கு இடமளித்தல் எனக் கூறப்படுகிறது. இதில் சேர விரும்பும் மாணவர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூன் 2023-24 ஆம் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாங்கள் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளையும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என மருத்துவ நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.மேலும் அவர் கூறுகையில், "எந்தவொரு கட்டுப்பாடும் பந்தமும் இருக்காது என்றாலும், மாணவர்கள் மருத்துவரான பிறகு, ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சேவை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும், "அவர்கள் இங்கு ஐந்து வருடங்கள் படித்து ஒரு டாக்டரானால், அவர்கள் ஐந்து வருடங்கள் ஏழைகளுக்கு சேவை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments