நியூசிலாந்தின் வெலிங்டனில், சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்த நுாதன சட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.
தென்மேற்கு பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் அமலில் ஏற்கனவே உள்ளது. இதை, 14 வயதாக குறைக்கும் புதிய சட்டம், அடுத்த ஆண்டு அமலுக்கு வருவதாக, நியூசி., அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சிகரெட் விற்பனைக்கான வயது குறைந்துக் கொண்டே வரும் வகையில் இந்த சட்டத்தில் புதுமையான அம்சம் இடம் பெற்றுள்ளது. அதாவது, 2022ல், 14 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே சிகரெட் விற்பனை செய்யப்படும். இது, 2023ல், 15 வயதாகவும், 2024ல், 16 ஆகவும் உயர்ந்து கொண்டே வரும் என நியூசி அரசு திட்டமிட்டுள்ளது.
புகைப்பிடிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆபத்தான ஒன்று தான். இருப்பினும், நியூசி அரசு இளைஞர்கள் மீது கவனம் செலுத்துவதின் அவசியம் என்ன? ஏனென்றால், அவர்கள் நிகழ் காலத்தை விட வருங்காலம் முக்கியம் என நினைக்கின்றனர். எனவே தான் இளைஞர்களை கருத்தில்கொண்டு இந்த புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளது.
இந்த சட்டத்தால் இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதை உடனடியாக தடுக்க முடியாது என்றாலும், ஆண்டுகள் செல்லச் செல்ல, இளைஞர்கள் சிகரெட் பிடிப்பது குறையும்.
உதாரணமாக, இந்த சட்டம் அமலுக்கு வந்து, 65 ஆண்டுகள் ஆன பின், 80 வயதானவர்கள் மட்டும் தான் சிகரெட்டை வாங்க முடியும் என மாற வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அரசு சிகரெட் பழக்கத்தை தடுக்கும் வகையில், சிகரேட் விற்பனைக்கு அதிக வரிகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக சிகரெட் பிடிப்போர் சதவீதம், 11 சதவீதமாக குறைந்திருக்கிறது.
தினமும் சிகரெட் பிடிப்போர் சதவீதம், 9 சதவீதமாக சரிவடைந்து காணப்பட்டது. ஆகவே வருங்காலத்தில் நாட்டில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து அறவே ஒழிக்க, புதிய சட்டம் வழி வகுக்கும் என, நியூசி, அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
TVS Jupiter ஸ்கூட்டர் 30 ஆயிரம் ரூபாயில்! 64KM மைலேஜ் தரும்! விவரம்!
மலிவான விலையில் சிறந்த மைலேஜ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Share your comments