பெண்சக்தியை பொருளாதார வல்லமைப் பெற்றவர்களாக உருவாக்கி, லட்சாதிபதியாக மாற்றும் வகையில், புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மாநில அரசு. இந்தத் திட்டம் பெண்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக, சமுதாயத்தில் தன்னுடையத் தனித்தன்மையில் முத்திரை பதிப்பவர்களாக மாற்றும் வகையில், பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி,வரும் 2025ம் ஆண்டிற்குள், 1.25 லட்சம் பெண்களை லட்சாதிகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக லட்சாதிபதி தீதி யோஜனா என்றத்திட்டத்தை உத்தராகண்ட் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமித் தொடங்கி வைத்தார்.இந்தப் புதியத் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்களை ஊக்கப்படுத்தவும், பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலக்கு
லட்சாதிபதி தீதி திட்டத்தின் கீழ், வரும் 3 ஆண்டுகளில் 1.25 லட்சம் பெண்களை லட்சாதிபதியாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் வரை
சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை வட்டியில்லாக் கடன் வழங்கப்ழுடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 லட்சம் ரூபாய் வரை இந்தத்திட்டத்தில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோல மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதில், உத்தராகண்ட் அரசு உறுதியாக உள்ளது.
மேலும் படிக்க...
அகவிலைப்படி நிவாரணத் தொகை 15% அதிகரிக்கிறது-பென்சனர்களுக்கு மகிழ்ச்சி!-
சோலார் பம்ப்செட் அமைக்க 90% அரசு மானியம்- வேளாண் துறை அசத்தல்!
Share your comments