ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம் ஆனது தனது பயனர்களுக்கு பயனுள்ள புதிய வசதிகளை அளித்து வரும் நிலையில், தற்போது புதிதாக இ-பாஸ்புக் வசதி அறிமுகம் செய்துள்ளது.
இ-பாஸ்புக் வசதி (e-passbook Facility)
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம் (EPFO ) ஆனது 20223 ஆம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி இறுதியில், 8.15% வட்டியாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு வட்டி தொகை பயனர்களுக்கு அவர்களின் கணக்கில் செலுத்தப்படும். இதே போல் EPFO அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
EPFO பயனர்கள் தனது கணக்கில் உள்ள தொகை குறித்த விபரங்களை முழுவதுமாக அறிந்து கொள்வதற்காக இ பாஸ்புக் வசதி முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.
இதன் மூலமாக பயனர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அதன் மூலம் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இந்நிலையில் தற்போது புதியதாக வசதி ஒன்றை EPFO அதில் சேர்த்துள்ளது. அதன்படி, இதன் மூலம் பயனர்கள் தனது கணக்கின் விபரங்களை கிராபிக்ஸ் முறையில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அதிக வட்டி தரும் டிஜிட்டல் FD திட்டம்: இதோ சிறப்பு அம்சங்கள்!
பிஎஃப் பணம் பெறுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? தெரியாமல் கூட இந்த டைம்ல எடுக்காதீங்க..!!
Share your comments