1. மற்றவை

100 ரூபாய்க்கு தங்கம் விற்கும் நகை வியாபாரிகள்! காரணம் என்ன?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Gold For Rs.100

இந்தியாவில் நகை வியாபாரிகள் எதிர்பாராத வகையில் மிகவும் குறைந்த விலையில் 100 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். நகைக்கடை இணையதளத்தின் மூலம் ரூ.100-க்கு பொதுமக்கள் தங்கத்தை வாங்கலாம். கொரோனா பொதுமுடக்க காலத்தின் போது ஆன்லைனில் தங்கம் வாங்க பொதுமக்கள் திரண்டு வந்தனர். குறைந்தபட்சம் ஒரு கிராம் அளவுக்கு பணம் காட்டியவுடன் தங்கம் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்களில் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இதையடுத்து, மாலையில் சிறிதளவு விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இன்று காலையிலும் விலைச் சரிவு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ.4,350.00 என விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.24 குறைந்து ரூ.34,800 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,504 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,320 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,320 ஆகவும், கேரளாவில் ரூ.4,323 ஆகவும், டெல்லியில் ரூ.4,535 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,560 ஆகவும், ஒசூரில் ரூ.4,362 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,361 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ரூ.64.30 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.64.80 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நகை வியாபாரிகள் குறைந்தபட்சமாக ரூ.100க்கு தங்கம் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

இனி வாடிக்கையாளர்கள் நகைக்கடை இணையதளத்தின் மூலம் ரூ.100-க்கு தங்கத்தை வாங்கலாம். கொரோனா பொதுமுடக்க காலத்தின் போது ஆன்லைனில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஒரு கிராம் அளவுக்கு பணம் கட்டியவுடன் தங்கம் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

தங்கத்தின் விலை Rs. 1200 குறைந்துள்ளது! முழு விவரம்!

ரூ .9000 தங்கத்தின் விலை மலிவானது! 10 கிராம் தங்கத்தின் விலை?

English Summary: Jewelers selling gold for 100 rupees! What is the reason? Published on: 29 September 2021, 04:56 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.