LIC new Pension Scheme
எல்ஐசி (LIC) நிறுவனம் புதிய பென்சன் பிளஸ் (New Pension Plus) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் நேற்று (செப்டம்பர் 5) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டம் பங்குச் சந்தையுடன் தொடர்பில்லாத திட்டமாகும். எனவே பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் இத்திட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. பென்சன் பிளஸ் திட்டம் வாயிலாக தொடர்ந்து பணத்தை சேமிப்பு ஓய்வுக்கால நிதியை உருவாக்கலாம்.
பென்சன் திட்டம் (Pension Scheme)
பின்னர் திட்டத்தின் காலம் முடிவடைந்தபின் ஆண்டுத்தொகை திட்டம் (Annuity Plan) வாங்கி அதன் வாயிலாக உங்கள் நிதியை மாதம் தோறும் நிலையான வருமானம் பெறும் வகையில் மாற்றிக்கொள்ளலாம். பென்சன் பிளஸ் திட்டத்தில் ஒரே பிரீமியம், தொடர் பிரீமியம் என இரு வகையில் முதலீடு செய்யலாம். தொடர் பிரீமியம் பொறுத்தவரை எவ்வளவு பிரீமியத் தொகை என்பதையும், பாலிசி காலத்தையும் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், தொடர்ந்து பிரீமியத் தொகையை செலுத்தி வர வேண்டும்.
மொத்தம் நான்கு வகையான நிதிகள் உள்ளன. இதில் பாலிசிதாரர் விருப்பப்பட்ட நிதியை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். ஒரு பாலிசி ஆண்டில் நான்கு முறை இலவசமாக நிதியை மாற்றிக்கொள்ளலாம்.
நிதியில் உள்ள பணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு பின் பாதியாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்த பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய நேரடியாக எல்ஐசி அலுவலகத்துக்கு செல்லலாம். அல்லது எல்ஐசி ஏஜெண்டுகள் வாயிலாக முதலீடு செய்யலாம். மேலும், https://licindia.in/ இணையதளம் வாயிலாகவும் முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க
Share your comments