கோவிட் -19 பெருந்தொற்று காலங்களில் 5 இல் ஒரு பங்கு பெண்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாக டிஜிட்டல் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனமான ஸ்கிரிப் பாக்ஸ் (Scripbox) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் (Mutual fund)
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் SIP திட்டம் என்பது நடுத்தர வர்க்க மக்களுக்குக் கிடைத்த ஒரு அதிர்ஷ்டமான திட்டமாகும். அதற்கு முக்கிய காரணம் 100 ரூபாய்க்கும் அதில் முதலீடு செய்யும் வசதியை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியது தான். அதில் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல ஃபண்ட் திட்டங்களை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக சில மியூச்சுவல் ஃபண்ட் சிப் திட்டங்கள் அபரிமிதமான வளர்ச்சியை அளித்தும் வருகின்றன.
SIP முறையிலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டுத் தொகையானது குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1000 ஆகும். அதனாலேயே இந்த முதலீட்டுத் திட்டமானது நடுத்தர வர்க்க மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் மதிப்பில் முதல் இடத்தைப் பிடித்த SIP ஃபண்ட் பற்றி இதில் காணலாம்.
500 ரூபாயில் அதிக ஸ்டார் ரேட்டிங் பெற்று அதிக லாபம் தந்த மியூச்சுவல் ஃபண்டுகள்:
- ஆக்சிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் (Axis Small Cap Fund)
- யூடிஐ ஃப்ளெக்சிகேப் ஃபண்ட் (UTI Flexi cap fund)
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் தொல்லை: விரைவில் விடிவுகாலம்!
Share your comments