1. மற்றவை

ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்-ICICI முக்கிய அறிவிப்பு

T. Vigneshwaran
T. Vigneshwaran

ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு. அடுத்த மாதம் முதல் பரிவர்த்தனைக் கட்டணங்களில் மாற்றங்கள் உள்ளன. இதனை சார்ந்த முக்கிய அறிவிப்பை  ICICI வங்கி வெளியிட்டுள்ளது.

என்னென்ன கட்டணங்கள் அதிகரிக்க போகின்றன என்று பார்க்கலாம்.

ICICI வங்கியின் பண பரிவர்த்தனை, காசோலைக்கான கட்டண விகிதங்கள், ஏடிஎம் (ATM) கட்டணங்கள் என்று பல கட்டணங்கள் மாறவுள்ளன.இந்த கட்டணங்கள் எவ்வளவு அதிகரிக்கப்படும்.

பண பரிவர்தனைகளின் கட்டணங்கள் என்று பார்த்தால், மாதத்திற்கு முதல் 4 பரிவர்த்தனைகள் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும். மதிப்பு அடிப்படையில் பார்த்தால், வங்கிக் கணக்கு உள்ள கிளையில் பணப் பரிவர்த்தனை செய்தால் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பணப் பரிவர்த்தனை செய்யலாம்.அதற்குமேல்  பரிவர்த்தனை ஏற்பட்டால் 1000 ரூபாய்க்கு ரூ.5 என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.

மூன்றாம் தரப்பு மூலமாக பரிவர்த்தனை நடந்தால் நாள் ஒன்றுக்கு ரூ.25,000 மட்டுமே செய்ய அனுமதியுள்ளது. அதைத் தாண்டி அனுமதி இல்லை. அதன்படி 25,000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25,000 என்ற வரம்பு இருக்கும். ஆனால் அதிக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைத்ராபாத், மும்பை உள்ளிட்ட ஆறு நகரங்களில் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாகவும்,இவை தவிர மற்ற நகரங்களில் மாதத்திற்கு முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசமாகவும் அதிகபட்ச பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு நிதி ரீதியிலான பரிவர்த்தனைக்கு 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு வருடத்திற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேல் 10 காசோலைகள் கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். மேற்கண்ட கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க:

இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவரா? பி.எஃப் பணத்தை எடுக்கமுடியவில்லையா.. இந்த வழியை பின்பற்றுங்கள்

கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாவிட்டால் தளர்வுகள் வாபஸ்: மத்திய அரசு எச்சரிக்கை!

ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!

English Summary: Major changes from August 1 - ICICI Bank important key announcement Published on: 07 July 2021, 09:51 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.