புதிய ஊதியக் குறியீட்டை அரசாங்கம் விரைவில் அமல்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர், இந்த நடைமுறை ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வருவதாக இருந்தது. ஆனால் முன்பு கிடைத்த தகவலின்படி இது அக்டோபர் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது புதிய ஊதியக் குறியீடு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது எனக் கூறப்படுகிறது. இதற்கான வரைவு விதிகளை அனைத்து மாநிலங்களும் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய விதியின் கீழ், ஊழியர்களின் சம்பளம், விடுமுறை போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!
விடுமுறை நாட்கள் நீட்டிக்கப் போகிறது.
ஊழியர்களுடைய ஈட்டிய விடுப்பு (ஏர்ண்ட் லீவ்) 240-ல் இருந்து 300 ஆக உயரும். தொழிலாளர் சட்டத்தின் விதிகளில் மாற்றங்கள் தொடர்பாகத் தொழிலாளர், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே பல விதிகள் முன்னதாக விவாதிக்கப்பட்டன. இதில் ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை 240-லிருந்து 300 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது என்பது நினைவு கூறத்தக்கது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
சம்பளம் மாற்றமடையும்
புதிய ஊதியக் குறியீட்டின் அடிப்படையில், ஊழியர்களுடைய சம்பளத்தின் கட்டமைப்பில் மாற்றம் இருக்கும். அவர்களுடைய டேக் ஹோம் சம்பளம் குறையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
கொடுப்பனவுகளில் மாற்றம்
ஒரு ஊழியரின் நிறுவனத்திற்கான செலவில் (CTC) மூன்று முதல் நான்கு கூறுகள் இருக்கின்றன. அடிப்படை சம்பளம், பிஎஃப் போன்ற ஓய்வூதிய பலன்கள், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் மற்றும் எல்டிஏ மற்றும் பொழுதுபோக்கு அலவன்ஸ் முதலான வரி சேமிப்பு கொடுப்பனவுகள் இதன் கீழ் அடங்கும். அந்த சூழ்நிலையில், புதிய ஊதியக் குறியீட்டின் விதிகளை அமல்படுத்த நிறுவனங்கள் பல கொடுப்பனவுகளை குறைக்க வேண்டிய நிலை வரலாம் எனக் கூறப்படுகிறது.
மாதத்தின் விடுமுறை நாட்கள் அதிகரிக்கலாம்
புதிய ஊதியக் குறியீட்டின்படி வேலை நேரம் 12 ஆக உயரும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில் புதிய விதியில் வாரத்திற்கு 48 மணிநேரம் என்ற விதி பொருந்தும் எனக் கூறப்படுகிறது. உண்மையில் 12 மணி நேரம் வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு விதி குறித்து சில தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியிருந்தன என்பது நினைவுக் கூறத்தக்கது. இது குறித்து விளக்கம் அளித்த அரசானது வாரத்தில் 48 மணி நேரம் வேலை என்ற விதி இருக்கும் எனவும், ஒருவர் 8 மணி நேரம் வேலை செய்யும் நிலையில், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் எனவும், அந்நிலையில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
கோவை வனப்பகுதியில் இ-கேமரா பொருத்த ரூ.7.2 கோடி ஒதுக்கீடு
மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்! இன்றே விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!
Share your comments