ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வுபெற்ற ஊழியர்கள், அதிகரித்த ஓய்வூதியம் மற்றும் பிற ஆவணங்களுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது.
பிப்ரவரி 20, 2023 அன்று வெளியிடப்பட்ட EPFO இன் சுற்றறிக்கையின்படி நாளை வரை ஓய்வூதியம் பலன்களை தொடர்ந்து பெற விண்ணபிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு நீட்டிப்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். அவர்கள் இப்போது எந்த தொந்தரவும் இல்லாமல் அதிகரித்த ஓய்வூதியத்தினை பெற விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதனுடன், ஓய்வுபெற்ற ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியக் கொடுப்பனவுகளைத் தொடர்வதற்கான முக்கியமான ஆவணமாக ஒவ்வொரு ஆண்டும் தங்களின் பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 01, 2014 தேதிக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களும், அதிகரித்த ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்கள் என்று ஓய்வூதிய நிதி அமைப்பு ஆரம்பத்தில் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. எனவே, ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிகரித்த ஓய்வூதியத்தினை பெற விண்ணப்பத்தை வழங்குவது முக்கியம்.
ஓய்வுபெற்ற பணியாளர்கள் தங்களது ஓய்வூதியத்தைத் தொடர, அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான எளிதான மற்றும் மிகவும் வசதியான வழி ஆன்லைன் முறை. மேலும், அதை ஆஃப்லைனில் சமர்ப்பிக்க அவர்கள் அருகிலுள்ள வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்லலாம்.
ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்திருப்பது EPFO-யின் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். அதிக ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான செயல்முறை தன்னிச்சையானது இல்லை என்றும் (automatic), தனது தகுதி தேவைகளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க உறுப்பினர் தான் பொறுப்பு என்றும் EPFO சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகுதியான பணியாளர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில், வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதிய நிதிக்கு நிதியை மாற்றுவதற்கான ஒப்பந்தம் (higher pension), நிலையான ஊதிய உச்சவரம்பான ₹5,000/ ₹6,500-க்கு மேல் அதிக ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதியில் முதலாளியின் பங்குக்கான சான்று, மற்றும் முதலாளி மற்றும் பணியாளரின் அறிவிப்புடன் கூடிய கூட்டு விருப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தனது தீர்ப்பில், அதிகப்பட்ச ஓய்வூதியத்தை தேர்வு செய்ய தகுதியான ஊழியர்களுக்கு- தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து நான்கு மாதங்கள் அவகாசம் அளித்திருந்தது.
காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் காலக்கெடுவினை நீட்டிப்பு செய்வது குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதிகரித்த ஓய்வூதியம் பெற மற்றும் பிற ஆவணங்களுக்கான விண்ணப்பத்தை விரைவாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதனிடையே கேரள உயர் நீதிமன்றம் ஆன்லைன் அமைப்பில், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், அதற்கான முன் ஒப்புதலுக்கான ஆதாரத்தை வழங்காமல், அதிக பங்களிப்பைத் தேர்வுசெய்ய, EPFO அனுமதிக்குமாறு வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: business today
மேலும் காண்க:
மண்புழு உரம் தயாரிப்பில் செய்ய வேண்டியவை? செய்யக்கூடாதவை என்ன?
Share your comments