1. மற்றவை

'ஊது பாவை' எனப்படும் மருத்துவ செடி: வைரலான வீடியோ!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Medicinal plant called "Oodhu paavai": viral video!

தமிழ்நாட்டில் காணப்படும் இந்த தாவரம் ஊதுபாவை என்று அழைக்கப்படுகிறது மற்றும் மழைக்காடுகளில் மட்டுமே வளரும். இது கடவுளின் அபாரமான படைப்பு, இது ஒரு மருத்துவ தாவரமாகும், இது அதன் மகரந்த தானியங்களை ஒலியுடன் வீசுகிறது. இந்த தாவரமானது, ஒரு வரலாறு காணத நீராவி ரயில் இயந்திரம் போன்று தோன்றுகிறது. அப்படி என்ன, இந்த தாவரத்தில் உள்ளது, வாருங்கள் இந்தப் பதிவில் காணலாம்.

பல நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள், சமூக ஊடக தளங்களில், ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளனர், இது தமிழில் "ஊது பாவை" என்று அழைக்கப்படும் விசித்திரமான தோற்றமுடைய மருத்துவ தாவரம் எனவும், காற்றில் மகரந்தத்தை வீசுகிறது எனவும் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் (Digital Artwork) எனப்படும் கலைப்படைப்பு, உண்மை என்று கண் நம்பலாம், ஆனால் பூத்தி நம்பாது என்பது, இந்த விஷயத்தில் உண்மையாகிவிட்டது.

வீடியோவில், மூன்று சிவப்பு உயிரினங்கள் இலைகளால் சூழப்பட்டுள்ளன மற்றும் அவற்றின் உச்சியில் இருந்து நீண்டுகொண்டிருக்கும் மெல்லிய, எக்காளம் போன்ற புனல்களைக் கொண்டுள்ளன. ஒரு நேரத்தில், அவற்றின் பூசணி வடிவ உடல்கள் காற்றில் வீங்கி, பின்னர் சுருங்கி, கார்க்-பாப்பிங் போல் காட்சியளிக்கின்றது.

"தமிழில் OODHU PAAVAI என்று அழைக்கப்படும், இந்த மருத்துவ தாவரமானது, மழை பெய்யும் இருண்ட காடுகளில் மட்டுமே காணப்படும், செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியான முகநூல் பதிவு அதாவது Facebook வீடியோவைக் கொண்டுள்ளது. "தன்னை வளர்த்துக் கொள்ள, அதன் மகரந்தத் துகள்களை அதன் புனல் போன்ற அமைப்பு மூலம் அவ்வப்போது வெளியேற்றுகிறது. உண்மையில், கடவுளின் படைப்பு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது."

TNPSC குரூப் 1 தேர்வு: ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரி சந்தீப் திரிபாதி மற்றும் மனநல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ராய் கல்லிவயலில் இருவரும் இந்த கூற்றை ட்வீட் செய்ததையடுத்து, இந்த வீடியோ இந்திய சமூக ஊடகங்களில் குறிப்பாக பிரபலமானது மற்றும் அதிக கவனத்தையும் பெற்றது என்பது குறிப்பிடதக்கது. கல்லிவயாலில் செப்டம்பர் 26 அன்று வீடியோவின் ட்வீட் இரண்டு நாட்களுக்குள் 1,500 முறை ரீட்வீட் செய்யப்பட்டது; இதையடுத்து திரிபாதி தனது ட்வீட்டை நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

r/plants subreddit உட்பட பல தாவரங்கள் தொடர்பான சமூக ஊடக குழுக்களுக்கும் கூட இந்த பதிவை அகற்றினர் என்பது குறிப்பிடதக்கது.

பதிவை அகற்ற காரணம் என்ன?

ஆம், இந்த வீடியோ Finland painted reindeer-உடன் reflective paint எனப்படும் தொழில்நுட்பத்தால் ஆனது.

இன்னும் குறிப்பாக கூற வேண்டும் என்றால், வைரலான பதிவுகள், இதன் உட்கருத்தை தவறாக எடுத்துக்கொண்டதே இதற்கு காரணமாகும். இது லண்டனைச் சேர்ந்த மோஷன் டிசைனர் மற்றும் 3D கிராபிக்ஸ் கலைஞரான லூக் பென்ரி என்பவரால் உருவாக்கப்பட்ட CGI அனிமேஷன் ஆகும், இதன் இன்ஸ்டாகிராம் இடுக்கையில் உள்ள வீடியோவின் வாட்டர்மார்க்கில் பார்க்க முடிகிறது.

ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?

டிஜிட்டல் உருவாக்கம் உண்மையான தாவரத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும், USA TODAY மற்றும் Factly.in ஆகியவற்றால் "ஊது பாவை" என்ற தாவரம் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பென்ரி கூறினார்.

மாறாக கலைஞர் தனது ஓய்வு நேரத்தில் உருவாக்கிய "digital fungi" "டிஜிட்டல் பூஞ்சைகளின்" அதாவது பல அனிமேஷன்கள் மற்றும் கிராபிக்ஸ்களில், இதுவும் ஒன்றாகும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

வானிலை ஆய்வு மையம்: அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வேளாண்மை இயந்திரங்களுக்கு மானியம்: இன்றே விண்ணப்பியுங்கள்

English Summary: Medicinal plant called "Oodhu paavai": viral video! Published on: 02 June 2022, 05:31 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.