மத்திய ஊழியர்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சி செய்தி உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹவுஸ் அலவன்ஸையும் அதிகரிக்க உள்ளது அரசு. ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படி அதிகரித்து வருகிறது. இப்போது ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவிலும் அதிகரிப்பு இருக்கப் போகிறது.
மேலும் படிக்க: தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
அரசு முன்னரே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருப்பதால் எச்ஆர்ஏ-வில் அதிகரிப்பு ஏற்படப்போவது என்பது உறுதி ஆகும். 2023-ம் ஆண்டுக்குள் ஊழியர்களின் எச்ஆர்ஏ அதிகரிக்கும். இருப்பினும், அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் எனும் அளவில் அதிகரித்தால் மட்டுமே இது நடக்கும். ஜூலை 2022க்குப் பிறகு, அகவிலைப்படி 4-5 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி 38 அல்லது 39 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அவர்களின் அகவிலைப்படி 34 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அகவிலைப்படியுடன், பிற கொடுப்பனவுகளிலும் ஒரு அதிகரிப்பு இருக்ககூடும். இதில் மிகவும் முக்கியமானது வீட்டு வாடகை கொடுப்பனவாகும்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
2021 ஆம் ஆண்டில், ஜூலைக்குப் பிறகு, அகவிலைப்படி 25% ஐத் தாண்டியதைத் தொடர்ந்து வீட்டு வாடகை கொடுப்பனவும் திருத்தப்பட்டது. ஜூலை 2021 இல், அரசானது அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி இருந்தது. எச்ஆர்ஏ-இன் தற்போதைய விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% ஆக உள்ளன. இப்போது அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் எப்போது நடக்கும் என்பது ஊழியர்களின் கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க: 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி? இன்றே விண்ணப்பியுங்கள்!
நகரத்தின் வகையின்படி, எச்ஆர்ஏ 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் தற்போது வழங்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு குறிப்பாணையின்படி, அகவிலைப்படியுடன் வீட்டு வாடகை கொடுப்பனவும் அவ்வப்போது திருத்தம் செய்யப்படும் என்று அரசாங்கம் கூறியிருந்ததை அடுத்து இப்போது மகிழ்ச்சியான செய்தியினை எதிர்ப்பார்க்கலாம்.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!
எச்ஆர்ஏ: கொடுப்பனவு 3% அதிகரிக்கலாம்
வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3% ஆக இருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. எச்.ஆர்.ஏ தற்போதுள்ள அதிகபட்ச விகிதமான 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயரும். ஆனால், அகவிலைப்படி 50% -ஐ அடையும் போதுதான் இது நடக்கும்.
அகவிலைப்படி 50% ஐத் தாண்டினால், வீட்டு வாடகை கொடுப்பனவு 30%, 20% மற்றும் 10% ஆக மாறும் எனக் கொள்ளலாம். வீட்டு வாடகை கொடுப்பனவு, நகரங்களின்படி X, Y மற்றும் Z வகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ் பிரிவில் வரும் மத்திய பணியாளர்களுக்கு 27 சதவீத ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. அகவிலைப்படி 50 சதவீதமானால், இது 30 சதவீதமாகும். ஒய் வகுப்பினருக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். X வகுப்பு ஊழியர்களுக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரலாம்.
மேலும் படிக்க: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
எச்ஆர்ஏ அதிகரித்தால் எவ்வளவு பணம் அதிகரிக்கும்?
7வது ஊதியக்குழு மேட்ரிக்ஸின் படி, மத்திய ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 56,900 ரூபாய் ஆகும். வீட்டு வாடகை கொடுப்பனவு 27 சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இதை எளிய கணக்கீடு மூலம் புரிந்து கொள்ளலாம்.
எச்ஆர்ஏ = ரூ 56900 x 27/100 = ரூ 15363/மாதம்
எச்ஆர்ஏ 30% ஆனால் = ரூ 56,900 x 30/100 = ரூ 17,070/மாதம்
எச்ஆர்ஏ-ல் மொத்த அதிகரிப்பு: ரூ 1707/மாதம்
ஆண்டு எச்ஆர்ஏ அதிகரிப்பு = ரூ 20,484
மேலும் படிக்க
10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!
Share your comments