வாட்ஸ்அப்பில் இனி நம்முடைய குரலையும் பதிவு செய்து ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சம் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்டுகள் செய்ய வேண்டும் என்றும் செய்ய முடியும் என்றும் மும்முரமாகச் சோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் பீட்டா சோதனை செய்து வருகிறது.
மேலும் படிக்க: Aavin: ஆவின் பச்சைப்பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு!
இதுவரையில் நம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்டோக்கள், வீடியோக்கள், மெசேஜ்களை வைத்து வருகிறோம். இனிமேல் கூடுதலாக வாய்ஸ் மெசேஜையும் ஸ்டேட்டஸாக வைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதிக்கப்பட்டு வருகின்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
அதன்படி, வாட்ஸ்அப் பீட்டா 2.22.16.3 என்ற ஆண்ட்ராய்டு வாய்ஸ் ஸ்டேட்டஸ்க்கான சோதனை நடந்து வருகின்றது. சாதாரணமாக ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது போல், ஸ்டேட்டஸ் பகுதியில் அனுப்பலாம் எனக் கூறப்படுகிறது. இதற்காக ஸ்டேட்டஸ் திரையில் ‘மைக்’ லோகோ வர இருக்கிறது. அதனைக் கிளிக் செய்து, 30 நொடிகள் வரையிலான குரல்பதிவை வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
இதே போன்று, Do Not Disturb என்ற அம்சத்தையும் வாட்ஸ்அப் செயலி சோதித்து வருகிறது. ஆனால், இது பயனர்களுக்கு எத்தகைய வகையில் வசதியாக இருக்கும் என்பது குறித்துத் தெளிவான செய்திகள் எதுவம் வரவில்லை. வாட்ஸ்அப்பில் இந்த மாதம் வந்துள்ள புதிய அம்சங்களைப் பெறுவதற்கு, உங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யதால் போதும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
5 வருடத்தில் ரூ.18 லட்சம் சேமிக்கும் திட்டம்! இன்றே அப்ளை பண்ணுங்க!!
புத்தாண்டில் வணிக சிலிண்டர் விலை உயர்வு: கலக்கத்தில் பொதுமக்கள்!
Share your comments