1. மற்றவை

இனி ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை வேறொரு கிளைக்கு மாற்றலாம்!

Poonguzhali R
Poonguzhali R
Now you can transfer your bank account to another branch online!

எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்குச் செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றலாம். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்கள் சிரமமின்றி எளிதாக டிரான்ஸாக்ஷன் செய்துகொள்ள ஆன்லைன் வசதிகளை வங்கி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் வங்கி கிளையை மாற்ற நீங்கள் வங்கிகளுக்கு அலைந்து திரிந்து மாற்றவேண்டும்.

வீண் அலைச்சலை குறைக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி புதிய சேவையினை வழங்கியுள்ளது, அதாவது, எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக் கிளையை மாற்ற விரும்பினால் வங்கிக்குச் செல்லாமல் நேரடியாக எஸ்பிஐயின் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்களின் வங்கி கிளையினை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இன்டர்நெட் பேங்கிங் மூலம் உங்கள் எஸ்பிஐ கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் சேவையை பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றுவதற்கான கோரிக்கை உள்ளிட, நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கியின் கிளைக் குறியீடு உங்களுக்குத் தேவைப்படும்.

அதோடு, உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து அதன் பின்னர் வங்கியின் இணைய சேவையினைத் தொடங்க வேண்டும். ஆன்லைன் செயல்முறையைத் தவிர, யோனோ ஆப் அல்லது யோனோ லைட் மூலம் உங்கள் வங்கி கிளையை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முக்கியம் உங்கள் மொபைல் எண் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில் இணைக்காவிட்டால் உங்களுக்கு ஓடிபி கிடைக்காது, ஓடிபி வந்தால் மட்டுமே உங்களால் கணக்கை மாற்ற முடியும்.

செயல்முறைகள் வருமாறு,

1) முதலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான onlinesbi.com இல் உள்நுழையவும்.
2) அதில் 'பெர்சனல் பேங்கிங்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3) பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கிளிக் செய்யவும்.
4) பிறகு இ-சேவை என்ற டேப் இருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.
5) டிரான்ஸ்பர் சேவிங்ஸ் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யவும்.
6) இப்போது மாற்றப்பட வேண்டிய உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
7) நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் கிளையின் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை உள்ளிடவும்.

8) உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்து, உறுதி செய்வதற்கான பட்டனை க்ளிக் செய்யவேண்டும்.
9) இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை நிரப்பி, பின்னர் உறுதிப்படுத்தவும்.
10) இதனை செய்த சில நாட்களுக்குப் பிறகு உங்கள் கணக்கு நீங்கள் விருப்பப்பட்ட கிளைக்கு மாற்றப்படும்.

மேலும் படிக்க

சமையல் பொருட்களின் விலை அதிரடி உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

சிறுநீரகக் கற்களை கரைக்க இயற்கையான ஐந்து எளிய வழிகள்! 

English Summary: Now you can transfer your bank account to another branch online! Published on: 26 November 2022, 04:21 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.