1. மற்றவை

முதியோர் உதவித்தொகை: ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

R. Balakrishnan
R. Balakrishnan
Old Age Pension Scheme

நவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக தற்போது இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில், முதியோர் உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள் (Documents Needed)

  1. விண்ணப்பதாரரின் போட்டோ
  2. ரேஷன் கார்டு
  3. ஆதார் கார்டு
  4. வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம்

விண்ணபிக்கும் முறை (How to Apply)

  • முதலில் https://tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரிக்குள் செல்ல வேண்டும்.
  • ஆங்கிலத்தில் அனைத்து குறிப்புகளும் இருக்கும்; விருப்பப்பட்டால் தமிழ் மொழியை தேர்ந்தெடுக்கலாம்.
  • அதில், 'குடிமக்களுக்கான சேவைகள்' (Citizen Services) என்ற பகுதியை 'கிளிக்' செய்து உள்ளே நுழையவும்.
  • ஏற்கனேவே அதில் கணக்கு வைத்துள்ளவர்கள் 'பாஸ்வேர்டு' கொடுத்து உள்ளே நுழையலாம். இல்லாவிட்டால் புதிய 'பாஸ்வேர்டு' கொடுத்து 'லாகின்' செய்யவும்.
  • அதில் 'லாகின்' செய்தவுடன் 'ரெவன்யூ டிபார்ட்மென்ட்' என்ற ஆப்சனை தேர்வு செய்து கிளிக் செய்யவும்.
  • முதியோர் உதவித்தொகை திட்டம் (National Old Age Pension Scheme) என்பதை தேர்தெடுக்க வேண்டும்.
  • அப்போது வரும் பாக்ஸில் தேவையான ஆவணங்கள் குறித்த லிஸ்ட் மற்றும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தகவல் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் புரொஸீடு ( proceed) பட்டனை கிளிக் செய்யவும்.
  • ரெஜிஸ்டர் 'CAN' என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதில், வரக்கூடிய விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, ஆதார் எண், தாலுகா, மாவட்டம், கல்வித்தகுதி, நிலையான வீட்டு முகவரி, வார்டு எண், இமெயில் முகவரி, செல்போன் எண் போன்ற பல தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • உங்களின் செல்போனுக்கு வரக்கூடிய OTP எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து உங்களின் முகவரி போன்ற தகவல்களை சரிபார்த்து உள்ளீடு செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து வரும் நிலைகளில் உதவித்தொகை தபால்துறை அல்லது வங்கிக்கணக்கு மூலமாக, பெற விரும்பும் ஆப்சனை தேர்வு செய்யவும்.
  • வங்கிக்கணக்கு என்றால் அது தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டும்.
  • பின்னர், உங்களின் ஆதார் கார்டு, புகைப்படம் போன்ற ஆவணங்களை அப்லோடு செய்தவுடன், நெட் பேங்கிங், யூபிஐ மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினால், ஒப்புகை சீட்டு கிடைக்கும்.

உதவித்தொகை

குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உங்களின் முகவரி தொடர்பான வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., அலுவலகத்திலிருந்து, சரிபார்ப்பு பணிக்காக அழைப்பர். அப்போது ஆன்லைனில் அப்லோடு செய்த ஆவணங்களின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் காப்பி அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும். ஆவணங்கள் முறையாக இருந்தால் தாசில்தாரின் ஒப்புதல் கிடைத்தவுடன், மாதந்தோறும் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

மேலும் படிக்க

வருமான வரி ரிட்டர்ன் இன்னும் வரவில்லையா? அப்போ உடனே இதைப் பண்ணுங்க!

ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்: ரூ. 60 லட்சம் ரிட்டர்ன்!

English Summary: Old Age Pension Scheme: How to Apply Online? Published on: 16 August 2022, 06:53 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.