மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும்.
வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)
ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து பென்சன் கிடைக்கும். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் வழங்குவது நிறுத்தப்படும். ஒவ்வொரு மத்திய அரசு ஓய்வூதியதாரரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் (Digital life certificate) சேவையை அரசு கொண்டுவந்துள்ளது.
இதுபோக வங்கிகளும், தபால் அலுவலகங்கள், தபால் துறை வங்கி ஆகியவை ஓய்வூதியதாரரின் வீட்டுக்கே நேரடியாக வந்து வாழ்நாள் சான்றிதழை வாங்கி சமர்ப்பிக்கும் சேவையை வழங்கி வருகின்றன. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமல்லாமல் மாநில அரசு ஓய்வூதியதாரர்களும் இச்சேவையை பயன்படுத்தலாம்.
எல்லா ஓய்வூதியதாரர்களும் நவம்பர் மாத இறுதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயமில்லை. குறிப்பிட்ட சில ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?
ஒரு ஆண்டுக்குள் பென்சன் தொடங்கி இருக்க வேண்டும். அதாவது 2021 நவம்பர் மாதத்துக்கு பின் உங்களுக்கு பென்சன் கிடைக்க தொடங்கியிருக்க வேண்டும்.
2021 டிசம்பர் அல்லது அதற்கு பின் கடைசியாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
EPFO பென்சன் பெறும் ஓய்வூதியதாரர்கள் நவம்பர் மாத இறுதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. ஏனெனில், EPFO பென்சன் பெறும் ஓய்வூதியதாரர்கள், கடைசியாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்த ஒரு ஆண்டுக்குள் அடுத்த வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் போதும்.
மேலும் படிக்க
பெண்களுக்கு ஏற்ற சிறப்பான சேமிப்புத் திட்டம்: வெறும் 500 ரூபாயில்!
Share your comments