பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் 35,000 ரூபாயில் இருந்து ரூ. 58,300 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பயணப்படியை உயர்த்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பென்சன் (Pension)
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பயணப்படி உயர்த்தப்படும் என்ற சட்டத் திருத்த மசோதாவை சத்தீஸ்கர் அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவின்படி, முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35,000 ரூபாயில் இருந்து ரூ. 58,300 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த மசோதாவின் படி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முதல் உறுப்பினர் பதவிக்கு (ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான காலம்) ஒவ்வொரு ஒரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ. 1,000 பெறுவார்கள்.
ரயில்வே அல்லது விமானப் பயணத்துக்கான கொடுப்பனவு, முன்பு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முன்னாள் எம்எல்ஏக்களுக்கான இந்த உதவித்தொகை ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு தொலைபேசி உதவித் தொகை ரூ. 10,000 மற்றும் ஆர்டர்லி அலவன்ஸ் ரூ. 15,000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, அரசின் கருவூலத்தில் ரூ. 16.96 கோடி அளவுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று மதிப்பிடப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோருக்கான சம்பள உயர்வு மசோதாவை சட்டப் பேரவை நிறைவேற்றியது. இதனால், ஆண்டுக்கு 6.81 கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் தற்போது 90 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
இவர்கள் மட்டும் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்கத் தேவையில்லை!
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!
Share your comments