PMVVY திட்டத்தின் குறைந்தபட்ச கொள்முதலுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால தேவையை கருதி பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துகொண்டுதான் இருக்கின்றனர், ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாட தேவைக்காக முதலீடு செய்கின்றனர். சம்பாதிக்கும் காலத்தில் ஒருவருக்கு பெரிய அளவில் வருமானம் தேவைப்படுவதில்லை. இருந்தாலும் ஓய்வுக்கு பின்னர் ஒருவரால் இளம் வயதில் இருந்தது போல சம்பாதிக்க முடிவதில்லை. இந்த நிலை காரணமாக மக்கள் பலரும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான திட்டத்திலேயே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டிக்கொண்டு வருகின்றனர். மூத்த குடிமகன்களுக்காக அரசாங்கம் ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது, இதில் பங்களிப்பதன் மூலம் முதலீட்டாளருக்கு சிறந்த அளவில் ஓய்வூதியம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: VAO: கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு- முழு விவரம் உள்ளே!
மூத்த குடிமக்களுக்கான அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்ற திட்டத்தில் 60 வயதிற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வருகின்ற ஒவ்வொரு மாதமும் ரூ.18500 ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் மானியத்துடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை வழங்குகின்றது. இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதிய வசதி வழங்கப்பட்டு வருகின்றது. முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் மொத்தமாக ரூ.15 லட்சம் டெபாசியிட் செய்யலாம்.
PMVVY திட்டத்தில் சுமாராகக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பங்களிக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் தொகையை டெபாசிட் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாளருக்குக் குறைப்பட்சத்தில் ஓய்வூதியமாக ரூ.1000 முதல் அதிகபட்ச ஓய்வூதியமாக ரூ 9250 வரை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15 லட்சம், காலாண்டு ஓய்வூதியம் ரூ.14,89,933, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.14,76,064 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.14,49,086 எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க
100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த முடிவா? அதிர்ச்சித் தகவல்!
Share your comments