சீனியர் சிட்டிசன்களுக்கான பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PM Vaya Vandana Yojana) ஓய்வூதிய திட்டம் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. 2017ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி எல்ஐசி (LIC) நிறுவனம் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறுவதற்காகவே தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த திட்டத்தில் முதலீடு செய்து ஓய்வூதிய பலன்களை பெற விரும்புவோர் மார்ச் 31ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும். பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் தோறும் 18,500 ரூபாய் வரை பென்சன் பெறலாம். அதிகபட்சமாக 15 லட்சம் ரூபய் வரை முதலீடு செய்யலாம். மொத்தம் 10 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் மெச்சூரிட்டிக்கு பின் பயனாளி மாத வாரியாக, காலாண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக, ஆண்டு வாரியாக என விருப்பப்படி தேர்வு செய்து ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு தீவிர நோய் தாக்கம் ஏற்பட்டால், மெச்சூரிட்டிக்கு முன்பாகவே பணத்தை எடுத்துக்கொள்ளலாம். கணவன் அல்லது மனைவிக்காகவும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பாலிசி வாங்கி மூன்று ஆண்டுகளில் கடனாகவும் வாங்கலாம்.
பாலிசிதாரர் இறந்து விட்டால்
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால் மொத்த தொகையும் நாமினிக்கு அல்லது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு விடும். இத்திட்டத்தின் சிறப்பு அம்சமே கணவன், மனைவி இருவருமே இணைந்து முதலீடு செய்து ஓய்வுக்காலத்திக்ல் ஓய்வூதிய பலன்களை பெறலாம் என்பது தான். இந்த திட்டத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து தலா 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருந்தால் மொத்த நிதி 30 லட்சம் ரூபாய். இதன்படி, கணவன், மனைவி இருவருக்கும் மாதம் 9250 ரூபாய் என மொத்தமாக 18500 ரூபாய் பென்சன் பணம் கிடைக்கும்.
60 வயதை கடந்த சீனியர் சிட்டிசன்கள் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். 2023 மார்ச் 31ஆம் தேதியுடன் இந்த திட்டம் முடிவுக்கு வர இருக்கிறது.
மேலும் படிக்க
PF பணத்தை குறிவைக்கும் மோசடி கும்பல்: எப்படி பாதுகாப்பது?
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் அறிவிப்பு!
Share your comments