1. மற்றவை

Beware: பென்சனர்களே உஷார்: இதை மட்டும் செய்யக்கூடாது!

R. Balakrishnan
R. Balakrishnan
Pensioners Aware

ஓய்வூதியதாரர்களை குறிவைத்து மோசடி செய்து அவர்களின் பென்சன் பணத்தை கொள்ளை அடிக்கின்றன சில மோசடி கும்பல்கள். வயது முதிய ஓய்வூதியதாரர்களுக்கு உதவி செய்வதாக கூறி அவர்களின் பென்சன் பணத்தை சிலர் கொள்ளை அடிக்கின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை பென்சன் பெற உதவுவதாக கூறி அரசு அதிகாரி போல் ஏமாற்றி 8.50 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துள்ளார் ஒரு மோசடிக் காரர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பென்சனர்களே உஷார் (Pensioners beware)

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஜேந்திர சிங் மாலிக் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கடந்த ஜூலை 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இவர் உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகரில் காவல்துறை சப் இஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். எனினும், இவரது சொந்த ஊர் சஹாரன்பூர். இந்நிலையில், இவருக்கு கடந்த நவம்பர் 21ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து மொபைலில் அழைப்பு வந்துள்ளது.

மொபைலில் பேசியவர், தான் சஹாரன்பூர் கருவூல அதிகாரி எனவும், பிஜேந்திர சிங் மாலிக் சிங்கிற்கான பென்சனை சொந்த ஊரான சஹாரன்பூருக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், பிஜேந்திர சிங் மாலிக்கின் பணி தொடர்பான விவரங்களையும் சரியாக தெரிவித்துள்ளார். இதை நம்பி, தனது வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை கொடுத்துள்ளார். பின்னர் தனக்கு வந்த OTP பாஸ்வோர்டையும் கொடுத்துள்ளார்.

இதன் பின் சில நிமிடங்களில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 8.62 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக பிஜேந்திர சிங் மாலிக்கிற்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறையில் புகார் பதிவு செய்தார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி

இதுபோல, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை குறிவைத்து சில மோசடி கும்பல்கள் பணத்தை கொள்ளை அடித்து வருவதாக போலீசார் கூறுகின்றனர். எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது வங்கி கணக்கு எண், ஆதார் எண், பான் எண், OTP பாஸ்வோர்ட் உள்ளிட்ட முக்கியமான விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க

இனிமே இ-சேவை மையத்திலேயே எல்எல்ஆர் பெற முடியும்: விரைவில் அமலுக்கு வரப்போகுது!

EPFO: குறைந்தபட்ச பென்சன் உயர்வு எப்போது? மத்திய அரசின் பதில் என்ன?

English Summary: Pensioners beware: don't just do this! Published on: 21 December 2022, 02:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.