1. மற்றவை

PF Rules: திருமணத்திற்கு பிஎப் தொகையை எடுக்க நினைத்தால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
PF Rules

சேமிப்பு பணமாக பார்க்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை பல்வேறு தேவைகளுக்கும், அவசர காலத்துக்கும் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இதற்கான அனுமதியை ஊழியர்களுக்கு கொடுத்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும், தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிஎப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஓய்வுக்குப் பிறகு மட்டுமே பணம் கிடைக்கும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது உங்களின் அறியாமை.

பிஎஃப் பணம் (PF Money)

வழிமுறைகளுடன் நீங்கள் பாதியில் எடுக்கும் பிஎப் தொகைக்கு ஏற்ப உங்களின் ஓய்வூதிய பலன்கள் இருக்கும். அந்தவகையில் மருத்து சிகிச்சை, வீட்டு கடன், குழந்தைகளின் கல்விக் கடன் மற்றும் திருமணம் போன்ற தேவைகளுக்கு பிஎப் நிதியை ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக உங்களுக்கு திருமண தேவைக்கு பணம் தேவைபடுகிறது என்றால், அதற்காக வருங்கால வைப்பு நிதியை எடுப்பது எப்படி? என தெரியாமல் இருந்தால், அதற்கான வழிமுறையை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்காக பணம் எடுக்க விதிகள்:

EPFO உறுப்பினர்கள் தங்கள் சொந்த திருமணம், மகள், மகன், சகோதரி அல்லது சகோதரரின் திருமணத்திற்காக EPF கணக்கில் இருந்து 50 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். ஆனால், திருமணத்திற்காக பணத்தை எடுக்க விரும்பும் ஊழியர் ஒருவர் EPF-க்கு ஏழு வருடங்கள் பங்களிப்பை முடித்திருக்க வேண்டும்.

வழிமுறைகள்

  • உமாங் செயலி மூலம் பணம் ஈஸியாக எடுக்கலாம்.
  • உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உமாங் செயலியில் பதிவிறக்கம் செய்து பதிவு செய்யவும்.
  • செயலியில் கிடைக்கும் பல விருப்பங்களில் இருந்து EPFO விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  • ரைஸ் க்ளைம் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் UAN எண்ணை நிரப்பவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ EPFO-ல் உள்ளிடவும்.
  • உங்கள் PF கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வகையைத் தேர்ந்தெடுத்து படிவத்தை நிரப்பவும்.
  • படிவத்தைச் சமர்ப்பித்து, திரும்பப் பெறும் கோரிக்கைக்கான ஆதார் எண்ணைப் பெறவும்.
  • வழங்கப்பட்ட குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி திரும்பப் பெறும் கோரிக்கையைக் கண்காணிக்கவும்.
  • EPFO உங்கள் கணக்கிற்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பணத்தை மாற்றும்.

மேலும் படிக்க

இனி வாட்ஸ்அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம்: மாநில அரசின் அருமையான முயற்சி!

EPFO அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

English Summary: PF Rules: If you want to take PF amount for marriage, know this! Published on: 07 May 2023, 07:40 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.